தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் வெளியீடு ஜகமே தந்திரம். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இந்த படம் தற்போது ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியாகிறது ஜகமே தந்திரம் படம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜகமே தந்திரத்தில் ஃபர்ஸ்ட் லுக் பிக்சர் பிப்ரவரி 2020 வெளியானது.

அந்த ஃபர்ஸ்ட் லுக் பிக்சர் லியோனார்டோ டா வின்சியின் தி லாஸ்ட் சப்பர் ஓவியத்தைக் அடிப்படையாகக்கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தான் போன்ற இடத்தில் அமர்ந்திருக்கும் படம் மாஸாக உள்ளது. அதிரடி த்ரில்லராக ஜகமே தந்திரம் அமைகிறது.
கொரோனாவால் திரை உலகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று காலத்திற்கு முன்பு போஸ்ட் புரோடக்சன் வேர்க் இயங்கத் தொடங்கியது. ஜகமே தந்திரம் படப்பிடிப்பு வேலை முடிந்த நிலையில் இருப்பதால் போஸ்ட் புரோடக்சன் நடந்துகொண்டிருக்க பாடல் வெளியீடும் மோஷன் பிக்சரும் கூடிய விரைவில் வெளியாகும்.
ஜகமே தந்திரம் படம் 1 மே 2020 அன்று ரிலீசாக இருந்தது. உலகமே திக்குமுக்காடி இருக்கும் இந்த நிலையில் திட்டமிட்டபடி இருந்த வேலையும் நிகழாமல் தாமதித்து கொண்டே இருக்கிறது. கொரோனா என்னும் கொடிய நோயால் அனைவரும் ஸ்தம்பித்து உள்ளனர்.
தற்போது அனைவரும் சுதாரித்துக் கொண்டு அவரவர் வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் அவரவர் இருப்பிடத்தில் இருந்து கொண்டே வேலைகளைப் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தப் படத்தின் முக்கியமான செய்தி என்னவென்றால் இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.

தி டேவிற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். ஜகமே தந்திரம் படத்தின் டக்கரு டக்கரு என்னும் முதல் சிங்கிள் பாடல் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28யிற்காக காத்திருக்கின்றனர். மாதத்தின் முதல் நாளான இன்று அந்த நற்செய்தி யுடன் 28 நாட்களுக்கான கவுண்ட்டோன் ஆரம்பித்துவிட்டது.