க க க போ கதாநாயகி மடோனா கொண்டாடிய பிறந்தநாள்
என்னது என்னது கககபோ அப்படின்னா! காதலும் கடந்து போகும். மக்களே ஞாபகம் வந்துச்சா! மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடனம் நினைவுக்கு வந்ததா! அதே படத்தின் நாயகி தான் மடோனா செபாஸ்டியன்.
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
மானாட மயிலாட
மயிலோடு நானாடா
என்னோடு நீயாட வந்துட்டு போ
மடோனா செபாஸ்டியன்
1 அக்டோபர் 1992ல் கேரளத்தில் பிறந்திருக்கிறார். கர்நாடிக் மற்றும் அமெரிக்க இசைக் கலையை கற்ற கேரளத்து பைங்கிளி. 2010 திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கினார்.

திரை பயணம்
திரையுலகில் இசைப் பயணத்தை மேற்கொண்டவர் 2015ல் பிரேமம் படத்தில் நிவின் பாலிக்கு கதாநாயகியாக அறிமுகமானார். மலையாள திரையுலகில் சூழன்றவர் அதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
மக்கள் செல்வன்
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டின் அறிமுகமான படம் காதலும் கடந்து போகும். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக கலக்கினார் மடோனா செபாஸ்டியன். அடுத்த வருடமே இந்த ஜோடி கவண் என்னும் பிரமாதமான சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

பூந்தென்றல்
2015ல் திரையுலகில் நுழைந்தவர் இரண்டே வருடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் பங்காக இருந்தார். 2017 கவண் படத்தைத் தொடர்ந்து ப. பாண்டி என்னும் படத்தில் தனுஷின் ஜோடியாக இவரின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டது.
மேலும் படிக்க : யூடியூப் வியூஸ் மூலம் வரலாற்று சாதனை படைத்த கேஜிஎப்
திரையுலகம்
தமிழ் மலையாளம் என்று வலம் வந்தவர் மலையாளத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கன்னட திரையுலகிலும் பயணிக்கிறார்.

பிறந்தநாள்
நேற்று கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடி இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மடோனா செபாஸ்டியனுக்கு ரசிகர்களின் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க : அட்டகாசமான மணமக்கள்!ராணா-மிஹீகா