கர்ணனாக உருவெடுக்கும் தனுஷ்
தனுஷ் நடிப்பில் அவரது 41 ஆவது படத்தின் பெயர் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்து கர்ணனாக நடிக்கிறாரா தனுஷ்? என்று பலர் குரல் எழுப்ப அந்தப் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இப்பெயர் சூட்ட காரணம் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் கர்ணன். மகாபாரத கர்ணனுக்கோ கொடை வள்ளலாக திகழ சொத்து இருந்தது இந்த கதாபாத்திர கர்ணனுக்கும் எதுவுமில்லை ஆனால் நியாயத்திற்காக போராடும் உள்ளம் இருக்கிறது என மேலும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் யார் என்று தெரியுமா?
பரியேறும் பெருமாள் என்ற ஒரே ஒரு படத்தை இயக்கி பல புகழை தன்னகத்தே வைத்திருக்கும் திறமையான இயக்குனர். அவர் அளித்த பேட்டியில் கர்ணன் தான் தன்னுடைய முதல் படமாக எடுக்க இருந்ததாகவும் தன்னுடைய இயக்குனர் திறனை வெளிக்காட்டவே பரியேறும் பெருமாள் படத்தை முதலில் எடுத்து வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொடுத்தாலும் கொடுத்தாரு சூப்பரான எடுத்துக்காட்டாக கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
அண்மையில் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தருணங்களும் திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட காணொளியை வெளியிட்டுள்ளனர். ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளனர் கர்ணன் படக்குழுவினர்.
கலைப்புலி எஸ். தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். புதுமுகம் ராஜீஷா விஜயன் கதாநாயகியாக தனுசுடன் இணைந்து நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தை அசத்த யோகி பாபு மற்றும் துணை கதாபாத்திரத்தில் லால் அவர்களும் நடிக்கிறார்கள்.
கர்ணன் படத்தின் சிறிய டீசரும் தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியானது. பெரியவர் மகனாக சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் கையில் அருவாளுடன் காட்சியளிக்க நிழலை மட்டும் காட்டி ரசிகர்களை ஏமாற்றி உள்ளனர். ஆனால் ரசிகர்களும் சளைத்தவர்கள் அல்ல இதுவும் புதுப்பேட்டை வடசென்னை அசுரன் போன்ற சண்டையிடும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருக்குமோ என கேள்வி எழுப்பி விமர்சித்து உள்ளனர்.