ஞானமில்லா பக்தி மூடத்தனம்
ஞானம் இல்லா பக்தி மூடத்தனம்
சில பதிவுகளுக்கு முன்பு “பக்தி இல்லா ஞானம் குப்பை” என்ற தலைப்பில் சில தகவல்களை அறிந்திருப்போம். ஞானம் இல்லா பக்தியால் எவ்வாறான இன்னல்களை ஓர் ஆன்மா சந்திக்கும் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பக்தியை மட்டுமே நம்பும் மனிதர்கள்
‘ஞானம் இல்லா பக்தி’ கொண்ட மனிதர்களை நாம் கோவில்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. காவடி எடுத்துக்கொண்டு, அழகு கூத்திக்கொண்டு, தீ மிதித்துக்கொண்டு இருப்பர். இப்படி செய்வதால் இவந்த செயல்கள் எல்லாம் மூடத்தன செயல்கள் என்று இங்கு கூறப்படவில்லை. இந்த செயல்கள் ஒவ்வொன்றிற்கும் அறிவியல் விளக்கங்கள் உண்டு. கடவுளே அனைத்தையும் பார்த்துக் கொள்வார். என்ன பிரச்சனைகள் வந்தாலும் நான் பரிகாரங்களை மட்டுமே செய்து கொண்டு இருப்பேன் என்று இருப்பதுதான் ‘மூடத்தனம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
அனைத்து மதங்களிலும் மூடத்தனம் என்பது உண்டு
‘நான் கடவுள் அனுப்பிய தூதுவன்’ என்று கூறியவுடன் அவர் கூறுவது உண்மையா இல்லையா என்பதைகூட ஆராய முடியாமல், கற்களால் அடுத்து கொள்ளப்பட்ட சம்பவங்கள் சில மதங்களில் உண்டு. நோயுற்றுகிடந்த தன் குழந்தைகக்கு எந்த வித மருத்துவமும் தேவையில்லை, கடவுளே நேரில் வந்து என் குழந்தையை காப்பாற்றுவார் என்று குழந்தை மரணம் அடையும்வரை, மருத்துவமனைக்கே செல்லாமல இருந்த மதவாதிகளும் உண்டு.
தமிழர் வாழ்வியல்
பொதுவாக ஒரு பக்கம் கடவுள்களைப் பற்றிய போற்றி புராணங்கள் இருந்தாலும், அறிவியல் பூர்வமான விசயங்களை நமக்கே தெரியாமல் நம் வாழ்வியலில் இணைத்து கொடுத்துள்ளனர் தமிழ் மரபில் வந்த மகான்கள். நமக்கு அந்த நுட்பத்தை ஆராய்ந்து பிரித்துப் பார்க்க தெரியவில்லை என்பதற்காக, ஞானம் சார்ந்த விசயங்களை தமிழ் கொடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.
‘பணம் இல்லா பர்ஸ்’:
இந்த உலகில் வாழ கட்டாயம் அறிவு தேவை. இந்த உலகத்தைவிட்டு புறப்பட ஞானமே தேவை. அறிவிற்கும் ஞானத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அறிவின் உச்சமே ஞானம். இந்த உலகில் வாழும்வரை நான் கடவுளை மட்டுமே வழிபடுவேன், என் ஞானத்தை வளர்த்திக்கொள்ள எவ்வித முயற்சியையும் எடுக்க மாட்டேன் என்பது எப்படியென்றால், “பணம் இல்லா பர்ஸ்” போன்றது. அந்த பர்ஸ் இருந்து என்ன பயன்? ஒன்றிற்கும் உதாவாது. அதேபோன்றுதான், ஞானமில்லா பக்தி என்பது மூடத்தனம் என்பதை புரிந்துகொண்டு, பக்தியை மட்டுமே நம்பிக்கொண்டு ஞான நாட்டங்கள் இல்லாத கூட்டத்திடம் இருந்து சற்று விலகி இருப்போம்.