காரசாரமான இஞ்சி பர்ஃபி
இஞ்சியில் உடலுக்கு தேவையான ஜீரண சக்தி உள்ளது. தினமும் இஞ்சியை அளவாக உணவில் சேர்த்து வருவதால் வாய்வு தொல்லை இருக்காது. இஞ்சியை வைத்து இஞ்சிமரப்பா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சாப்பிடுவதால் கபத்தை நீக்கும். இஞ்சிமரப்பா வீட்டிலேயே செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
இஞ்சிமரப்பா
தேவையான பொருட்கள்
இஞ்சி தோல் சீவி நறுக்கியது 2 கப், நெய் 5 ஸ்பூன், சீனி இரண்டரை கப், பால் 2 கப், ஏலக்காய்-2, தேவையான அளவு உப்பு.
செய்முறை விளக்கம்
இஞ்சியை நன்றாக கழுவி தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடுபடுத்தி அரைத்த இஞ்சி பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும்.
நெய் பிரிந்து வரும் வரை ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் வதக்கவும். பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிறிது நேரம் கிளறி கொண்டே இருக்கவும். கெட்டியான பதம் வந்ததும், அரை கப் பால் சேர்த்து மீண்டும் கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.
அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் தூவி கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறி கெட்டி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி ஆறவைத்து தேவையான ஷேப்பில் வெட்டி எடுத்தால் சுவையான இஞ்சி பர்பி தயார்.
தேவையெனில் உலர்ந்த பழங்களை தூவி அலங்கரிக்கலாம். காரசாரமான, சுவையான, இனிப்பான, இஞ்சி பர்ஃபி தயார். படிக்கும்போதே செய்யத் தோன்றும் தூண்டுகின்ற இந்த இஞ்சி பர்பி யை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.