ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக…
தீரன் அதிகாரம் ஒன்று, டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த வினோத் இயக்கத்தில், தமிழில் உருவான பரபரப்புடன், எதிர்பார்ப்பூட்டும் திரைப்படமாகும். பவாரியா நடவடிக்கை வழக்கிலிருந்து உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கொள்ளையர்களின் கொடூர நடவடிக்கையையும், தமிழ்நாடு காவல் துறையினரின் தீரமான நடவடிக்கை தொடர்புடைய படமாகும். கார்த்திக் சிவகுமார் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக உள்ளனர், அபிமன்யு சிங் முதன்மை எதிரியாக நடித்தார்.
ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்
ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்
தினம் தினம்
நான் மயங்குகிறேனே
பகல் எதுவோ இரவெதுவோ
வெளிச்சங்களை மறுப்பதினாலே
நிலவுகளின் சதி இதுவோ
அறையும் கதவும்
அடைந்தே கிடந்தாய்
இரவும் பகலும் இணையும்
இருளாய்
உனையே
உலகம் என நான்
நினையும் நிலையே
வரமாகும்
ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
வாழும் நேரம் எதிர்பார்த்தே
இருந்தேன் பல காலம் இது
நாள் வரையில் கனவெல்லாம்
இனிதாய் நனவாகும் இரவின்
மடியில்
உதடுகளின்
அசைவுகள் என்றாய்
பேச்செனவே அறிந்திருந்தேன்
ஒலிகளில்லா ஒரு வேலை நீ
கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்
இதுவே குறைவு
இனிமேல் இருக்கு
இனிதாய் தொடரும்
முதல் நாள் கிறுக்கு
உடலின்
இசைகள் உயிரின்
கசைகள் மறந்தேன்
பல நாட்கள்
ஒரு வீட்டில்
நீயும் நானும் ஒன்றாக
தூங்கும் நேரம் எதிர்பார்த்தே
எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய்
அரங்கேறும் விரும்பும்
வகையில்
மேலும் படிக்க : என் கண்ணாடி தோப்புகுள்ளே…. மலபார் போலீஸ் படம்