வந்தாச்சு.. வந்தாச்சு…வெடி வெடிக்க நேரம் வந்தாச்சு!!!!!
தீபாவளி
தீபாவளி பண்டிகை அனைவருக்கும் மிகவும் முக்கியமான கொண்டாட்ட தினம் ஆகும். தீபாவளி என்பது தீப ஒளி என்ற வார்த்தையில் இருந்து மருவி வந்தது. தீபம் இருளை போக்கும். ஒளி வெளிச்சம் தருவது ஆகும். அதாவது வாழ்வில் பல எண்ணங்கள் போராட்டங்கள் சவால்களை கடந்து நாம் அடையும் வெற்றியை குறிக்கும் அதாவது வாழ்வில் வரும் தீய எண்ணங்களை நீக்கும் என்றும் இதனை எடுத்துக் கொள்ளலாம் தீபாவளிக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.
தீபாவளி கொண்டாட்டங்கள்
தீபாவளி கொண்டாட்டங்கள் என்றால் நமது வீடுகளில் கங்கா ஸ்நானம், புத்தாடை இனிப்புகள், பொங்கல், வடை பாயசம் மற்றும் பெற்றோர்களிடம் ஆசி பெறுதல் அத்துடன் நண்பர்கள் உறவினர்களை சந்தித்து இணைப்புகளை பகிர்ந்து கொள்ளுதல் என பல இருக்கின்றது இதனைக் குறித்து சிலேட்டு குச்சி அடுத்தடுத்த பதிவுகளில் விளக்க இருக்கின்றது. மக்களே இன்னும் முப்பது நாள் தான் தீபாவளிக்கு இருக்கு, ஆகையால் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்குவோம்.
தீபாவளி ஆயத்தப்பணிகள்
தீபாவளி என்றாலே புத்தாடைகள் வாங்கவேண்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் பூஜைகள் செய்யவேண்டும் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் மற்றும் தீபாவளி லேகியம் வேண்டும் பெற்றோர்களின் ஆசை வேண்டும் அத்துடன் இறைவனின் காசையும் தரவேண்டும் இனிப்புகள் காரங்கள் உணவு படைக்க வேண்டும் அதனை மற்றவர்களுடன் பகிர வேண்டும் ஒற்றுமை மேலோங்க வேண்டும் பண்டிகை வண்ணமயமாக மிளிர வேண்டும் மத்தாப்புகள் சரசரவென ஒளி வெள்ளம் பொங்கப் பொங்க அத்துடன் வாணவேடிக்கைகள் என அந்த நாளில் விழாக்கோலம் போல் நாடெங்கும் ஜொலிஜொலிக்கும் அதற்கு நாம் என்ன ஆயத்தப்பணிகள் செய்வோம் என்பதை பார்ப்போம் இனிமேல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்ப்போம்……
மேலும் படிக்க : நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் ஆடி வெள்ளி