தீராத கஷ்டத்தை போக்கும் தீப வழிபாடு
காலத்தின் சூழ்நிலை காரணமாக ஓடி ஓடி பணத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறோம். நவீன மயமாகும் இன்றைய சூழ்நிலையில் வேலைப்பளு காரணமாக பெண்களும், ஆண்களும் இறைவழிபாட்டிற்கு என சிறிது நேரம் ஒதுக்குவது இல்லை. வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் இறைவனை வழிபடுவதும், சந்தோஷத்தில் இருக்கும் போது இறை நினைப்பு இல்லாமல் இருப்பதும் வழக்கமாகி வருகிறது.

அதிக சந்தோஷம் இருந்தாலும் திகட்டும். கஷ்டம் வந்தாலும் சிரமம். வாழ்க்கை என்றால் துன்பம், இன்பம் இரண்டும் தேவை தானே. துன்பத்தை மட்டும் அதிகமாக அனுபவிக்கிறோம். இன்பத்தை எப்படி? எப்போது? அனுபவிப்பது என்று கேட்பவர்கள் ஆக இருந்தால் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இரண்டு குத்து விளக்குகளை ஐந்து முகம் ஏற்றி வழிபட நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
தீராத கஷ்டங்கள் விரைவில் தீரும். உடனடி பலன் கிடைக்க நல்ல மாற்றத்தை பெற இரண்டு குத்து விளக்குகளை ஏற்றுவது கைமேல் பலன் கொடுக்கும். முன்னோர்கள் இறைவழிபாட்டில் காமாட்சி அம்மன் விளக்கை விட குத்து விளக்கு அதிகமாக ஏற்றி வழிபட்டனர். குத்து விளக்கை சுத்தமாக்கி பொட்டு வைத்து, எண்ணெய் ஊற்றி, ஐந்து முகத்திலும் திரி போட்டு, பிறகு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். திரியை தினமும் மாற்றலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது உத்தமம்.
மேலும் படிக்க : சகலமும் தரும் சஷ்டி விரதம் இருங்க..!!

ஒரு வாரம் வரை திரியை வைத்து உபயோகிக்க கூடாது. தீபம் ஏற்றும் போது விளக்கில் எண்ணெய் நிறைந்து இருக்க வேண்டும். குறைவாக எண்ணெய் இருக்கும் பட்சத்தில் விளக்கேற்றுவதால் கஷ்டம் வரும். விசேஷ நாட்களில் மட்டும் குத்துவிளக்கை பயன்படுத்தாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை ஏற்றி வழிபடலாம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது நல்லது தான். இதனால் கஷ்டம் வருவது கிடையாது. அதிக கஷ்டம், துன்பங்கள் இருப்பவர்கள் குத்து விளக்கு ஏற்றுவதால் உடனடி பலனை பெற முடியும் என்பதற்காகவே இந்த பதிவு.
மேலும் படிக்க : இந்த கஷ்டம் உங்களுக்கு இருக்கா..!!