திரைப்படங்கள்அதிகம் பார்ப்பவரா நீங்கள்?
வெள்ளிவிழா
இப்பொழுதெல்லாம் வெள்ளிக்கிழமை என்றாலே அஷ்டலட்சுமி பூஜை, குரு பூஜையெல்லாம் நம் நினைவுக்கு வருவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தபட்சம் இரண்டு படங்களாவது திரைக்கு வந்துவிடுகிறது. ரசிகர்கள் தங்களின் தலைவனின் திரை வருகைக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகளின் அவல நிலை
இளைஞர்கள் ஒரு புறம் இப்படிப்பட்ட ரசிகர் பட்டாலத்தில் சிக்கிக்கொண்டு இருக்க, பள்ளி மாணவர்களோ அதற்கு மேல். அவர்களடம் சென்று, ‘திருவாசகத் தேன்’ எனும் பொக்கிஷம் எந்த கடவுளை நோக்கி உருகி பாட வைத்தது என்று கேட்டால், ‘தெரியாது’ என்று கூறுகின்றனர். ஆனால் ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற வசனத்தை மட்டும் நன்றாக ஓதுகின்றனர். சரி ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் வந்த வரலாறு என்பதால் தெரியாது போல என்று விட்டுவிட்டு ஐம்பது வருடங்களுக்கு முன் தோன்றிய “வள்ளல் பெருமானின்” புகைப்படத்தை காட்டினால், ‘இது ஆணா பெண்ணா ?’ என்று கேட்கின்றனர். இதைவிட அவலநிலை என்று எதை கூற முடியும்?
சினிமா ஒருநாள் கூத்தல்ல
ஏதோ பொழுது போக்கிற்காகதானே பார்த்தோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவர் பார்க்கும் திரைப்படம் என்பது குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உளிவியல் நிபுணர்களின் கருத்து. அந்த படங்களில் இடம்பெறும் இசையோ ஒரு வாரத்திற்காவது தாக்கத்தை ஏற்படுத்தும். வசனங்களோ ஒரு மாதத்திற்குகூட தாக்கத்தை ஏற்படுத்தும்.
இப்படி பார்த்தால் நாம் பாக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையையும் அதன் தாக்கத்தையும் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
அப்படியென்றால் பொழுதுபோக்கே தவறா?
இப்படியெல்லாம் பார்த்தால் வாழ்வில் பொழுதுபோக்கே இருக்கக் கூடாதா? மன மகிழ்ச்சிக்குகூட திரைப்படங்களை தொடக்கூடாதா என்று கேட்டால்,
திரைப்படங்களை அறிமுகப் படுத்தியதே தமிழர் கலாச்சாரம் தான். அவர்கள் அறிமுகப்படுத்திய ஒன்று தவறான வழிகாட்டுதலாக இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால் தமிழர்கள் திரைப்படங்களை அறிமுக படுத்தவில்லை, திரைக்கூத்து என்னும் நாடக கூத்தையே அறிமுக படுத்தினார்கள். தமிழர்கள் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு பொழுதுபோக்கும் ஒரு புறம் மன மகிழ்ச்சி, வேடிக்கை, கேலிகள் நிறைந்ததாக இருந்தாலும் மறுபுறம் மனிதர்களுக்கு தேவையான ஞானத்தை வளர்க்கக் கூடியதாகவும் இருந்தது. வெறும் நேரத்தை கடத்தி வீணடிக்கக் கூடிய விசயங்களை ஒருபோதும் அவர்கள் வழங்கியதில்லை