Jallikattu bulls

குறைந்து வரும் கொரோனா…அலட்சியம் வேண்டாம் மக்களே…!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பரவல் குறைவுக்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும், அரசின் தீவிர நடவடிக்கைகள் தான் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படி இன்றைய தினம் தமிழக கொரோனா பரவல் மற்றும், இறப்பு, குணமடைந்தோர் தொடர்பான விபரங்கள்:

தமிழகத்தில் புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,39,221 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 5,894 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,69,907 ஆக உள்ளது.

மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,946 ஆக உள்ளது. 31,368 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியம் காட்டமால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துரை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *