டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்..
சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான செலவு, வரம்புகளை தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேவை எனில் ஏடிஎம் பரிவர்த்தனைகளை சில அம்சங்களில் இருந்து கூட அவர்கள் விலகலாம்.
பரிவர்த்தனை
அட்டை தாரர் இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்த விரும்பினால் சர்வதேச பரிவர்த்தனைகளை செயல்படுத்த வங்கியின் அனுமதி பெற வேண்டும் என்று கூறப் பட்டுள்ளன. ஆபத்து என்றால் வங்கிகள் நடப்பு அட்டைகளை செயலிழக்கச் செய்யலாம். புதிய அட்டைகளையும் வழங்கலாம்.
புதிய வழிகாட்டுதல்
புதிய வழிகாட்டுதலின்படி அட்டை பயனர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ‘ஸ்விச் ஆப்’ மற்றும் ‘ஸ்விச் ஆன்’ செய்து கொள்ளலாம். அட்டைதாரர்கள் தங்கள் வங்கி பயன்பாடுகள் செயலி பயன்பாடுகள் ஏடிஎம்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய கார்டு பயன்பாடுகள் அனைத்து வங்கிகளும் 24×27 சேவையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளன.
இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இயல்பு நிலையாக எந்த சேவைகளும் கிடைக்காது. இதனால் அட்டைதாரர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள், தேவைப்பட்டால் அவர்கள் வங்கியை அணுகி இன்று சேவைகளை தங்கள் அட்டைகளில் செயல்படுத்துமாறு கோர வேண்டும்.
பாதுகாப்பதற்காக
அக்டோபர் முதல் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளை பாதுகாப்பதற்காக புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யாத கார்டுகளில் புதிய ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது. இவர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை வசதி வேண்டுமெனில் வங்கியை அணுக வேண்டும்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த ரிசர்வ் வங்கி பல புதிய வழிகாட்டுதல்களை இவ்வாறு வெளியிட்டுள்ளன. புதிய விதிமுறைகள் என்னென்ன மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இனி இந்த விதி முறைகளை பயன்படுத்தலாம்.