சமையல் குறிப்புமருத்துவம்

எலும்புகளின் பலவீனத்தை போக்க..!!

சுவையின்மை

பேரீட்சையில் ஹீமோகுளோபின் உருவாக்குவதில் இதிலுள்ள இரும்பு சத்து உதவுகிறது. இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதில் பங்கெடுக்கிறது. நூறு கிராம் பேரீட்சையில் .90 மி.லி இரும்பு சத்து உள்ளன. பொட்டாசியம் தாது, குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது உடலுக்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. பித்தத்தை போக்கி தாகத்தை தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின்மை பிரச்சனைக்கு இது நல்ல நிவாரணியாகும்.

இயற்கை மருந்தாக

எளிதாக ஜீரணமாகும். ஒற்றை சர்க்கரைகள் நிறைந்து உள்ளதால், புத்துணர்ச்சி தரும். உடலுக்கு சக்தி கொடுக்கும். இதனால் தான் விரதம் நிறைவு செய்பவர்கள் இதை எடுத்து கொள்கின்றனர். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது. இதை எடுத்துக்கொள்வதால் இரும்பு சத்தை எளிதாக பெறலாம். பேறுகால பிரச்னை தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு இயற்கை மருந்தாக விளங்குகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கால் கால்சியம், இரும்புசத்து குறைபாடு ஏற்படும். இதை நிவர்த்தி செய்யவும், முறையற்ற மாதவிடாயை சரிசெய்ய பேரீட்சை பழம் மருந்தாகும். எலும்புகள் பலவீனம் ஆகும் போது கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படும். இதை சரி செய்ய பாலில் பேரீட்சை சேர்த்து கொதிக்க வைத்து பாலுடன் பழத்தையும் சேர்த்து சாப்பிட உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

ஞாபக சக்தி

பாலில், பேரீச்சை சேர்த்து கொதிவிட்டு ஆரிய பின் சாப்பிட சளி, இருமல் குணமாகும். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவோர், பாதாம், பேரீட்ச்சை, பாலில் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். ரத்தத்தை சுத்தபடுத்தி, எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயை குணப்படுத்தும். பசும்பாலில் பேரீட்ச்சை வேகா வைத்து உண்டால் இதய நோய்கள் அண்டாது.

சத்தான டானிக்

தேனில், பேரீட்ச்சை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பார்வை கோளாறுகள் நீங்கும். வைட்டமின் ஏ இருப்பதால் மாலைக்கண் நோயை விரட்டும். தேனில், பேரீட்ச்சை,பசும்பாலில் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கொதிக்கவிட்டு குடித்தால் குழந்தைகளுக்கு இது சத்தான டானிக் ஆகும். இதை இரவில் தூங்கும் முன் குடித்து வர உடல் நல்ல பலம் பெரும். புதிய ரத்தம் உண்டாகும்.

நம் தோளில் மென்மை உண்டாகும். தொற்று கிருமிகள் விரைவில் அண்டாது. பல் சம்மந்த வியாதி குணமடைந்து, பல் கெட்டிப்படும். ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகியவற்றில் பேரீட்ச்சை பழம், முக்கிய இடத்தை வகிக்கிறது.

மேலும் படிக்க

வாழைப்பழத்தின் சத்துக்கள் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *