ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

நாவராத்திரியில் நாம தெரிஞ்சுக்க வேண்டியது!

நவராத்திரியின் அழகு கொலு. அதனை அமைக்கும் போது எவ்வளவு சந்தேகங்கள்! மகா விஷ்ணுவின் தசாவதாரம் எவ்வாறு எந்த அமைப்பில் வைக்க வேண்டும்! வருடம் வருடம் ஒரு வருவதுடன் இந்த சந்தேகமும் கூடவே வருகிறது…

  • பறவைகள் மிருகங்கள் தொடர்ந்து மனிதர்கள் சன்னியாசிகளை தொடர்ந்து கடவுள்.
  • மோக்ஷம் அடையும் வழியில் கொலுப்படி அமைகிறது.
  • மகா விஷ்ணுவின் தசாவதாரம் அமைப்பு.
  • அவதாரங்களில் பின்னிருக்கும் கதை.

மகாவிஷ்ணு

படைத்தல் தொழிலை செய்பவர் பிரம்மா அழித்தல் தொழிலை செய்பவர் ருத்ரன் இவ்விரண்டிற்கும் நடுவில் காத்தல் தொழிலை செய்யும் மஹாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்து மக்களை காக்கிறார்.

  1. மச்சாவதாரம்
  2. கூர்மாவதாரம்
  3. வராக அவதாரம்
  4. நரசிம்ம அவதாரம்
  5. வாமன அவதாரம்
  6. பரசுராம அவதாரம்
  7. ராம அவதாரம்
  8. பலராம அவதாரம்
  9. கிருஷ்ண அவதாரம்
  10. கல்கி அவதாரம்

அவதாரத்தின் கதைகளைக் கேட்டுமாயின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும்.

மச்சாவதாரம்

உலகம் பிரளயத்தில் மூழ்க விஷ்ணு பகவான் மீண்டும் உலகத்தை ச்ருஷ்டிக்க தேவையான அடிப்படையான பொருட்களை காக்கும் விதத்தில் மச்சாவதாரம் எடுக்கப்பட்டது.

கூர்மாவதாரம்

மந்திர மலை கொண்டு பாற்கடலைக் கடையும்போது அடித்தளம் சற்று ஆட்டம் காண கூர்மாவதாரம் எடுக்கப்பட்டது.

வராக அவதாரம்

பன்றி உருவில் தோன்றி உலகத்தை இரண்யாட்சன் என்னும் அசுரன் இடமிருந்து காத்த அவதாரமே வராக அவதாரம்.

நரசிம்ம அவதாரம்

சிங்க முகமும் மனித உடலும் கூடியது நரசிம்ம அவதாரம் இரணியகசிபு என்னும் அரக்கனிடம் இருந்து பிரகலாதன் என்னும் பக்தனை காப்பதற்காக எடுத்தது.

மேலும் படிக்க : அமாவாசை படையல் செய்வது எப்படி

வாமன அவதாரம்

மகாபலி சக்கரத்தியின் செருக்கை அடக்கிய அவதாரம் வாமன அவதாரம்.

பரசுராம அவதாரம்

சிவபெருமானின் ஆயுதமான பரசுவைக் கொண்டு தவறான ஷத்ரியர்களை அழிக்க எடுத்த அவதாரமே பரசுராம அவதாரம்.

ராமாவதாரம்

மனிதப் பிறப்பில் எவ்வளவு ஒழுக்கமாக வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.

பலராம அவதாரம்

கிருஷ்ணருடன் கலப்பையுடன் எடுத்த அவதாரம் பலராம அவதாரம்.

கிருஷ்ணாவதாரம்

அனைத்து மாயையையும் காண்பித்து உலகத்தையே வசீகரம் செய்தது கிருஷ்ணாவதாரம்.

கல்கி அவதாரம்

கலியுகத்தில் வாழ்கின்ற நாம் கலியின் தாண்டவத்தின் போது குதிரை முகத்துடன் கல்கி அவதாரத்தை காணலாம்.

சந்தேகங்கள்

வராக அவதாரத்திற்கும் கல்கி அவதாரத்திற்கும் வேறுபாடு எவ்வாறு அறியலாம்?

பதில்: குதிரை முகத்துடன் இருப்பது கல்கி அவதாரம். பன்றி முகத்துடன் தித்திப் பல்லில் பூமியை கொண்டது வராக அவதாரம்.

பரசு ராமர் பலராமர் எவ்வாறு வித்தியாசம் கண்டு கொள்ள வேண்டும்?

பதில்: பரசு என்பது ஆங்கிலத்தில் ஆக்ஸ் எனப்படும். மரங்களை வெட்டுவதற்காக உபயோகப்படுத்தும் இந்த ஆயுதத்தை உடையவர் பரசுராமர். விவசாயத்திற்கு பயன்படும் கலப்பையை உடையவர் பலராமர்.

சில தசாவதாரத்தில் புத்தர் இருக்கிறதே! அப்போது எந்த அமைப்பில் வைக்க வேண்டும்?

மேலும் படிக்க : துஷ்ட சக்தி குறைய – மகிஷா சுரமர்த்தினி ஸ்லோகம்

பதில்: மேற்கூறிய அமைப்பே தசாவதாரம் ஆகும். இவ்வாறு இருக்கும் அமைப்பையே வாங்குதல் சிறந்தது. கடைகளில் பார்த்தவரை பலராமர் (அ) கல்கி இல்லாமல் புத்தரை கொண்ட செட்டுகளை காணலாம். அப்போது கிருஷ்ணர், புத்தர், கல்கி (அ) பலராமர், கிஷ்ணர், புத்தர் என்ற அமைப்பில் வைக்க வேண்டும்.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் கருத்தில் பதிவிடலாம்.

ஓம் நமோ நாராயணாய நம:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *