டேஸ்டி டார்க் சாக்லேட் ராகி கேக்
குழந்தைகளுக்கு ராகி மாவை வைத்து ஈஸியாக வீட்டிலேயே டார்க் சாக்லேட் கேக் செய்து கொடுக்கலாம். சாக்லேட் டைரக்டாக சாப்பிடுவதை விட இப்படி செய்து கொடுப்பதால் பற்களில் ஒட்டாது. பற்களைப் பாதுகாக்கலாம். வித்தியாசமாக செய்து கொடுப்பதால் குஷியாக சாப்பிடுவார்கள். டார்க் சாக்லேட் வித் ராகி கேக்.
டார்க் சாக்லேட் வித் ராகி கேக்.
தேவையான பொருட்கள்
முட்டை 2, பொடித்த சர்க்கரை அரைக் கப் அல்லது சுவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும். வெண்ணெய் அரை கப், பேக்கிங் பவுடர் சிறிதளவு, ராகி மாவு அரை கப், டார்க் சாக்லெட் 100 கிராம் பொடி செய்து வைக்கவும்.
செய்முறை விளக்கம் :
சாக்லேட்டை மைக்ரோ ஓவனில் அல்லது அடுப்பில் வைத்து உருக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி இதனுடன் சர்க்கரை பொடியை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
சாக்லேட், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் பீட் செய்து வைக்கவும். பிறகு ராகி மாவு மற்றும் பேக்கிங் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறி விடவும். கட்டி இல்லாமல் எல்லா கலவையும் ஒன்றாக கலந்து, நெய் தடவிய டிரேயில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 150 டிகிரி வெப்பநிலையில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்து ஆற வைத்து தேவையான ஷேப்பில் வெட்டி எடுத்தால் ஈஸியான டேஸ்டி ராகி டார்க் சாக்லேட் கேக் தயார்.