அசத்தலான உணவுப் பொருட்களும் அதன் மருத்துவ குணங்களும்
உணவே மருந்து என்பதை இந்த உலகமே அறிந்திருக்கும் நம் முன்னோர்கள் அனைவருமே என்னதான் அவ்வளவு வேலை செய்தாலும் கொஞ்சம் கூட வலிமை குறையாமல் 100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து பல தலைமுறைகளை பார்த்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து சென்றனர் அந்த காலத்தில் உழைப்பு ஒன்றை அவர்களின் முதலீடாக இருந்தது. அவ்வளவு கடினமாக அவர்கள் உழைத்தாலும் சலிக்காமல் மீண்டும் அடுத்த நாள் சென்று வேலை பார்க்க அவர்களுக்கு மிகப்பெரும் மருந்தாக இருந்தது இக்காலத்தில் உள்ள மாத்திரை மருந்துகள் இல்லை அக்காலத்தில் சிறந்து விளங்கிய உணவுகளே.
ஆம் நாம் மருத்துவத்தை மருந்தின் மூலமாக தேடுவதில் எந்த பயனும் இல்லை நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலே அனைத்தும் உள்ளது அதை தெரிந்து கொண்டாலே போதும் இன்றைய காலகட்டத்தில் ஃபாஸ்ட்புட் உணவுகளுக்கு அடிமையாகி விட்ட மக்கள் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை இதிலும் பல பேருக்கு இந்த உணவில் எந்த பயன் உள்ளது என்பதை தெரியாமல் இருப்பதால் உணவின் மகிமை தெரியாமலே போய்விடுகிறது. இந்நிலையில் எக்கால மக்களுக்கு உதவும் விதமாக சில உணவுப் பொருட்களும் அதில் உள்ள மருத்துவத்தின் குணங்களைப் பற்றியும் பின்வருமாறு காணலாம்.
உணவுப் பொருட்களும் மருத்துவ குணங்களும்
- கடுமையான சளியும் மூக்கடைப்பும் நீங்க தேனும் எலுமிச்சை பழமும் சேர்ந்து குடித்தால் போதும்.
- உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும் உடலுக்கு இரும்புச்சத்தை அதிகரிக்கவும் தினமும் முருங்கை கீரை சேர்த்தால் போதும்.
- நீரழிவு நோய் உள்ளவர்கள் துளசி இலை சாப்பிட்டு வந்தால் போதும்.
- தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்க தயிர் சேர்த்து குளித்து வந்தால் நீங்கிவிடும்.
- வயிற்றுப்போக்கு, பேதி போன்றவற்றை போக்க மாதுளம் பிஞ்சு சாப்பிட்டு வந்தால் நீங்கும்.
- கண் பார்வையை அதிகரிக்க கேரட், ஏலக்காய் , புதினா போன்றவற்றை எடுத்து வந்தால் பிரகாசமான கண் பார்வை கிடைக்கும்.
- நெல்லிக்கனி தினமும் எடுத்து வர வாழ்நாள் காலம் அதிகரிக்கும்.
இதுபோன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாம் சாதாரணமாக நினைக்கும் உணவுகளில் பலவிதமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கிறது. அதை தெரிந்து கொண்டு நாமும் அன்றாட வாழ்வில் சத்தான உணவுகளை எடுத்து உணவே மருந்து என்பதை நிஜமாக்குவோம்.