நிசர்கா புயல் இந்திய வானிலை ஆய்வு மையம்
மீண்டும் ஒரு புயல் உருவாக்கம் அது நிசர்கா புயல் அரபிக்கடலில் உருவாகியுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் தற்போது நிசர்கா புயல் வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் மும்பையிலிருந்து தென்மேற்குப் பகுதியில் மற்றும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தென்மேற்கு திசையிலும் தற்போது நிலைகொண்டுள்ளது.
நிசர்கா புயலானது மீண்டும் வலுவாகி வடக்கு திசை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குஜராத் இடையே கரையை கடக்கும் இந்தப் புயல் கரையை கடக்கும்போது இது 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு பகுதியில் அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அது நாளை கரையை கடக்க உள்ளது.
வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் வருவதால் தமிழ்நாட்டில் கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் பெய்த மலைகளில் காற்று அதிகரித்துள்ளது. மேலும் லட்சத்தீவு பகுதிகளில் ஜூன் 4ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.