புயல் காரணமாக பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு அறிவுரை!
தமிழகத்தில் புயல் பாதிப்பு இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் வாழும் மக்கள் டிசம்பர் 5-ஆம் தேதி வரை பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற முதல்வர் அறிவுறுத்துகின்றார்.
- தென்மாவட்டங்களுக்குள் தாழ்வானப்பகுதிகளில் நீர்த்தேக்கம் இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயராக இருக்கின்றது.
- தென் மாவட்டங்களில் மக்கள் வெளியில் வரமால இருக்க வேண்டும் என முதல்வர் ஆலோசனை செய்து வருகின்றார்.
காற்றழுத்த தாழ்வு காரணமாக புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு காரணமாக புயலானது சூழ்ந்து வருகின்றது தமிழ்நாட்டு மீனவர்கள் கரையை அடையுமாறு அரசு அறிவித்திருக்கின்றது. மேலும் மழை பெய்து அதிகமாகும்போது நீர் தேங்கும் பகுதிகளில் பம்பு செட்டுகள் மூலம் நீரை வெளியேற்ற அரசு முழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நீர்த்தேக்கங்களை சீர் செய்ய நடவடிக்கை
மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கங்களை அனுமதிக்க கூடாது என்பது அரசு தெளிவாக இருக்கின்றது. மழைநீர் அதிகரிக்கும்போது அரசின் அனைத்து நடவடிக்கைகளும் சீராக இருக்குமாறு அரசு முழுமையாக திட்டமிட்டு செயல்பாட்டிற்கு தயாராக இருக்கின்றது.
புரேவி புயல் வரும் அச்சம் வேண்டாம்
புரேவி எனப்படும் புயலானது மக்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். எனினும் இதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை அரசும் தயாராக இருக்கின்றது.
தொடர் நடவடிக்கைகளை மக்கள் கண்கூடாகக் காணலாம் என்று அரசு மக்களுக்கு அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்