டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க !

பாபா அணு ஆராய்ச்சி மையம்: 

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஒருங்கிணைந்த பேராபத்து மேலாண்மை மையத்தினை இந்திய குடியரசு தலைவர் மே 16, 2018இல் திறந்து வைத்தார். நாடு முழுவதும் 504 இடங்களின் கதிரியக்க நுண்ணுணர்வு மையங்களிலிருந்து தகவல்களை கொண்டு நடவடிக்கைகளை   இம்மையம் மேற்கொள்ளும்.  இம்மையத்தில் துவங்கப்பட்ட மல்டி லீஃப் கொலிமாட்டர்  சிஸ்டத்தால்  புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தில் காமா கதிர்வீச்சினை செலுத்தி  சிகிச்சை பெறலாம். மேலும் புற்றுநோய் தாக்கப்பட்ட மனித உடலின் குறிப்பிட்ட பாகங்களில் மட்டுமே கதிரினை செலுத்தலாம்.

மகாராஷ்டிரா மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையம்  அமைந்துள்ளது.  துப்ராஜ் இனகலப்பு நெல்லினை இம்மையம் உருவாக்கியுள்ளது இது 43வது அதிக விளைச்சல் தரும் BARC(Baba Automic Research  Center) உருவாக்கிய பயிர்வகை ஆகும். 


 பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்:இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து  மேற்கு கடற்கரைப் பகுதியை  ஒரே இரவில் சென்றடையும் வகையில்  பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் டிரெயின் சேவையை வடகிழக்கு முன்னனி இரயில்வே 2018 மே மாதம் துவங்கியது. வடகிழக்கு மாநில வளர்ச்சியை மேம்படுத்த துவங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநில கௌஹாத்தியிலிருந்து மகாராஷ்டிரா மாநில கல்யாண் நகரம் வரை ரயில் இயங்கும்.  அன்னாசி, சணல், பழங்கள், வேளாண் விளைப் பொருட்கள் மேற்கு கடற்கரைப் பகுதியிலுள்ள பெங்களூர், நாக்பூர், பூனே, மும்பை, போன்ற  நகரங்களில் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுத்தப்பட  இந்த ரயில்கள் உதவிகரமாக இருக்கும். 


தமிழ்நாட்டின் முதல் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்: 

மத்திய ரயில்வே துறையின் பதிவு செய்யாத பயணிகள் ரயில் சேவையை அந்தயோதயா எக்ஸ்பிரஸை துவங்கினார். அந்தயோதயா எக்ஸ்பிர்ஸ தெற்கத்திய மாநிலமான தமிழ்நாட்டில் தாம்பரம் திருநெல்வேலி பாதையில் பயணிக்கும். 
தூய்மையான காற்று இந்தியா தொடக்கம்: இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை கூட்டிணைத்து புதுடெல்லியில் தூய்மையான காற்று இந்தியா துவக்கத்தினை தொடங்கியுள்ளன.

 
சூர்ய கிரண் 13வது பதிப்பு: இந்தியா மற்றும் நேபாளத்திற்கு  இடையேயான சூரிய கிரண் எனும்  கூட்டுப் போர் பயிற்சியின் 13வது பதிப்பு 2018ஆம் ஆண்டின் மே 30 முதன் ஜூன் 12 வரைஉத்திரகாண்டு மாநிலத்தின் பித்தோரகார் நகரில் நடத்தப்பட்டது. 


 மிஷன் ராப்டார்: புதுடெல்லியில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்  வேகத்தை உயர்த்துவதை மிஷன் ராப்தார் என்ற ஒரு நாள் பயிற்சி பட்டறையை தொடங்கியது.  இதன் மூலம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை பயணிகளின் சராசரி வேகத்தை மணிக்கு 25 கிலோ மீட்டர் அதிகபடுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக  ரயில்வே வழித்தடங்கள் அடையாளம் காண  தொடங்கியுள்ளது. 
40 ஆண்டுகள் பழமையான கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய அறிவித்துள்ள மாநிலம் அருணாச்சல பிரதேசம் ஆகும். 


இந்திய தேர்தல் ஆணையம்: தேர்தலின் பொழுது நடக்கும் விதி மீறல்கள் கண்டுபிடிக்க புகைப்படம் , வீடியோ  எடுக்க உதவும் சி-விஜில் மொபைல் ஆப்பை இந்திய தேர்தல் ஆனையம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும்  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் அதனை பயன்படுத்தவுள்ளது.


ஓடிசா: இந்தியாவில் அழிந்துவரும் உயர்நீர் முதலைகளின் மிகப்பெரிய வசிப்பிடமாக ஓடிசா  மாநில பிதர்கனிகா தேசியபூங்கா உள்ளது.
பெங்களூர்: மின்னனு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக புதிய மையம் ஒன்று மத்திய அரசால்  பெங்களூரில் தொடங்கப்படவுள்ளது.
உலகப் பணத்தாள்: 
உலக பணத்தாள்கள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.

எல்இடி: 
உஜ்லா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சுமார் 32 லட்சம் எல்இடி என்னும் ஒளி உமில் பல்புகள்  கொடுக்கப்பட்டுள்ளது.

17வது உலக தமிழ்  இணைய  மாநாடு: 


17வது உலகத் தமிழ் இணைய மாநாடு  கோயம்ப்புத்தூரில் ஜூலை 6, 2018இல் தொடங்கியது. இது அறிவுசார் தமிழ் தேடு பொறிகள் என்னும் மையப்பொருளில்  இம்மாநாடுகள் நடைபெற்றது. இம்மாநாடு மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம்,பயிற்சி பட்டறை என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *