நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் பகுதி 3!
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் பகுதி தேர்வினை வெல்ல தேர்வர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதனை பயன்படுத்தி தேர்வை வெல்லலாம்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கான அளிக்கப்படும் ஏற்றுமதி ஊக்கத் தொகை விவசாயிகளின் நலன் கருதி தற்பொழுதைய 5% சதவிகிதத்திலிருந்து 10 சதவீகிதமாக அரசு உயர்த்தியிருக்கின்றது. இதன் மூலம் வெங்காயத்திற்கு உள்ளூர் சந்தைகளில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சகம் வதோராவில் அர்ப்பணித்தது.ஆந்திர கடற்கரையை தாக்கிய புயலின் பெயர் பெத்தாய் புயல் ஆகும்.
முஸ்லிம் மகளிர் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையின் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
Miss universe போட்டியில் பிலிப்பைன்ஸின் கேட்ரியானா கிரே வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது ஜெர்மனி அணி.
சீனாவில் நடைபெற்ற உலக பாட்மின்டன் டூர் பைனல்ஸ் கோப்பையை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.
37வது சீனியர் தேசிய படகு போட்டி சாம்பியன்ஷிப் பூனேயில் ராணுவ படகோட்டும் முனையத்தில் துவங்க உள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளிடையே அறிவுசார் சொத்து தலைப்பில் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சம்மேளனத்தின் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மற்றும் எஃப்சிசிஐ ஆகியவற்றுடன் கூட்டணி இணைந்து தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக புதுடெல்லியில் மற்றும் வாசிங்டன் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் உரையாடல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
109வது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம் மனாமா. பஹ்ரைனில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு இரண்டாவது கடற்படை தளபதிகள் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ஜெர்சுகுடா விமானநிலையம் வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜார்சுகுடா என்ற பெயர் மாற்றப்பட்டது.
சுற்றுலாத்துறை ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தீனதயாள் உபாத்தியாய கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் திறமை மேம்பாட்டுக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி தர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமன் பற்றி எழுதிய டைமைலெஸ் லக்ஷ்மன் என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். மேலும் உஷா ஸ்ரீனிவாஸ் லக்ஷ்மன் இந்த புத்தகத்தை எழுதினார்.
இந்தியா இந்தோனேஷியா கடலோர காவல்ப்படை இடையேயான உயர்மட்ட சந்திப்பு புதுடெல்லியில் முடிவடைந்தது.
ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியின் இரண்டாயிரத்து 35 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
பொருளாதார கூட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக ஏழாவது சுற்று இந்தியா தென்கொரியா இடையே நடைபெற்றது.
விவசாயிகளின் நலன் கருதி நில பதிவேட்டினை மின்னனு பதிவாக மாற்றம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு 2018 அக்டோபர் 10ல் தொடங்கியது. இதன் மூலம் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
புரட்சித்தலைவி அம்மா பள்ளி கட்டடம் டெல்லியில் தமிழக கல்வி கழகத்தின் சார்பில் மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையும் மலேசிய தமிழ் மணி மன்றமும் இணைந்து கடல்கடந்த தமிழர்களின் மரபுசார் அறிவு என்ற தலைப்பில் ஜனவரி 2018 மலேசியாவில் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்த உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 18 என்ற விரைவு ரயில் இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை 2019 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொண்டுவர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு.
பாதுகாப்பற்ற சூழல்
ஆபத்து காலங்களில் பெண்களின் அவசர பாதுகாப்பிற்காக ரௌத்திரம் என்னும் மொபைல் செயலியை சென்னையை சேர்ந்த சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவி சுதாகர் ரெட்டி உருவாக்கியுள்ளார். இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளபோது மொபைல் போனின் பவர் பட்டனை மூன்று முறை அழுத்தினால் இருக்கும் இடத்தினை துல்லியமான முகவரியுடன் காவல் நிலையத்திற்கு மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும்.
2017 தமிழகத்தில் 3,507 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சாலை விபத்தில் மரணமடைந்த பாதசாரிகள் அவர்கள். மேலும் இதுதொடர்பான புள்ளிவிவரத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது.
ஐந்தாவது இந்திய பெண்கள் தேசிய இயற்கை விவசாய திருவிழா அக்டோபர் 26, 2018 டெல்லியில் நடைபெற்றது தொடங்கி நடத்தப்பட்டது.
ஆறாவது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி அக்டோபர் 16, 2018 புதுடெல்லியில் தொடங்கி நடத்தப்பட்டது.
இந்தியாவில் நாய்களுக்கான பூங்கா ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உலகின் பல வகையான நாய்களை கண்காட்சியாக காணவும் வாங்கிச் சென்று வளர்க்கவும் முடியும். இதற்கான பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்ற மாற்றும் திட்டத்தை அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஹைவே நெஸ்ட், ஹைவே நெஸ்ட் மினி, ஹைவே வில்லேஜ் போன்ற திட்டங்கள் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுய உதவி குழுக்கள் மூலம் கிராமப்புற ஏழை பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த அனந்ததாரா என்ற திட்டத்தினை மேற்கு வங்க மாநில அரசு 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.
பசு சஞ்சீவி சேவா என்ற திட்டத்தின் மூலம் நடமாடும் கால்நடை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஹரியானா அரசு தொடங்கியது.
பிரபல திரைப்பட இயக்குனர் திரு மிருணாள் சென் நீண்டநாள் உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் மரணமடைந்தார்.அருணாச்சலப் பிரதேச மாநிலம் 2017-18 ஆம் ஆண்டின் 1,598,49 கோடி அளவுக்கு மொத்த வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பெறமுடியாத வளர்ச்சி நிலையினை 2018 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.
உலக அறிவுசார் சொத்து நிறுவனம் 2018ம் ஆண்டுக்கான உலகளாவிய அறிவுசார் சொத்து குறிகாட்டி அறிக்கையினை ஜெனிவாவில் வெளியிட்டது.
2017 ஆம் ஆண்டின் இந்தியாவில் வழங்கப்பட்ட காப்புரிமைகள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தால் திரைப்படம் நுழைவு, சேர்த்து தொலைக்காட்சி உள்ளிட்ட 23 பொருளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மரபுசார்ந்த சடங்குகள் மற்றும் திருவிழா தனித்தன்மை வாய்ந்த சப்பரம் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. மேலும் அனைத்து விதமான உணவுகள் மற்றும் தீவனங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகின்றது.
மத்திய பிரதேச அரசு குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. இப்பூங்காவில் ஆசியாவின் சிங்கங்களை குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து இடமாற்றம் திட்டத்திற்காகப் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் சதுரங்க போட்டியானது திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 3, 2018 அன்று தொடங்கியது. இப்போட்டியில் இரயில்வேயின் 14 மண்டலங்களிலிருந்து 87 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகாம் ஐஐடி சென்னை செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ராபர்ட் பாஷ் அறிவியல் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு மையமாமானது மாநில அரசின் பல்வேறு தகவல்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாடு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி என்ற திட்டம் செயல்படுகின்றது. இத்திட்டத்தின்படி 2017-2018 ஆண்டுகளில் தேசிய அளவிலான தூய்மையான பள்ளிகளில் பட்டியல்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பள்ளிகள் தேசிய தூய்மை பள்ளி விருதுகளை பெறுகின்றன.
கரூர் மாவட்டம் டி. செல்லாண்டி பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.
தேனி மாவட்டம் கொம்பை தொழு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
சிவகங்கை மாவட்டம் எம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
திருவள்ளூர் மாவட்டம் ஆரியம் பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
திண்டுக்கல் மாவட்டம் இ. ஆவாரம்பட்டி அரசு கே.ஆர். உயர்நிலைப் பள்ளி.
அரியலூர் மாவட்டம் சிலுவை சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
போன்ற பள்ளிகளை குறிப்பிடலாம்.
இந்தியா மற்றும் வியட்நாம் கடற்படை வீரர்கள் சென்னை கடல் பகுதியில் sahyog HOT TAC- 2018 என்ற போர் பயிற்சி ஈடுபட்டது.
வியட்நாமிலிருந்து CSB8001 பயிற்சிக்கென கப்பல் வந்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா குட்டி விமானம் பயிற்சி போட்டியில் நடிகர் அஜித்குமாரின் தக்க்ஷா குழுவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிறப்பான செயல்பாட்டின் பாராட்டி 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டம் போரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, தானியங்கி வருகைப் பதிவு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஆகிவற்றை கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவும் நல்லுள்ளங்களுக்கு பாதுகாப்பு விளங்கும் மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது.
இந்தியாவின் முதல் வெள்ள முன்னறிவிப்பு முறையை கொல்கத்தா நகரம் கொண்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலுள்ள அழகிய தால் ஏரியின் மத்தியில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஊந்த் கடல் முகலாய காலத்தை சேர்ந்த ஒரு வளைவு வடிவமுடைய பாலமாகும்.
ஒட்டக முதுகின் கூன் வடிவிலான இந்த பாலத்தை பாதுகாக்க ஜெர்மனி அரசாங்கம் 32 லட்சம் வழங்கியிருந்தது.
கிராம பஞ்சாயத்து
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தின் நாடு தழுவிய ஆராய்ச்சி திட்டத்தை மத்திய அரசாங்கம் தொடங்கியது. நாட்டிலுள்ள கிராம பகுதிகளில் நீடித்த முழுமையான வளர்ச்சிக்கு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 467 கிராம பஞ்சாயத்துகளிள் அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மனிதவளத்தை சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பசுக்களுக்கு என்ன தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். பசுக்களை சிறந்த முறையில் பராமரிக்க தனி அமைச்சகம் உருவாக்கி பாதுகாக்க மாநில அரசு முடிவு செய்தது.2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் முதல் பசுக்கள் சரணாலயத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியிருந்தது. 6000 பசுக்கள் பராமரிக்கும் வசதியுடன் 472 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.