போட்டித்தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அனைவருக்கும் நீண்ட நாள் கனவாகும். போட்டித் தேர்வை வெல்ல இலக்கை சரியாகத் திட்டமிட்டு, திட்டத்தை சரியாக செயல்படுத்து வெற்றி பெற வேண்டும். போட்டித் தேர்வர்களுக்காக சிலேட்டுகுச்சி நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள் கொடுத்துள்ளோம்.
இந்திய ராணுவ தலைமையகத்தில் மறு சீரமைப்பு காரணமாக புதிதாக ராணுவ துணை தளபதி பதவியை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது. இந்த ஒப்புதலை அடுத்து இந்தியாவில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைகளை இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பரமாஜித் சிங் ஆவார். சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனையில் இந்த புதிய இராணுவ பதவி உருவாக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொல்கத்தா ஜிஎஸ்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஹிம்கிரி ஆகும். ஹிம்கிரி கப்பலானது போர்க்கப்பல் ஆகும்.
கடற்படை பயன்பாட்டுக்காக இந்தியாவில் 17 ஏ திட்டத்தின்கீழ் 7 நவீன போர்க் கப்பல்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது 4 கப்பல்கள் மும்பையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிட்டெட் தயாரித்து இருக்கின்றனர்.
இந்திய அரசியல் ரஷ்யா கூட்டமைப்பின் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ரஷ்யா சார்பாக மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்க்கும் கப்பலான அட்மிரல் பண்ட்டலேயேவ் மற்றும் நடுத்தர பெருங்கடல் கப்பலான பெச்சோங்கா ஆகியவை பங்கேற்கிற்றன. மேலும் இந்திய கடற்படையின் சார்பாக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கியை எதிர்க்கும் கட்மாட்டா மற்றும் ஹெலிகாப்டர்கள் கலந்து கொள்கின்றன.
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகள் பட்டியலில் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பெற்று இருக்கின்றார். மேலும் இரண்டாம் இடத்தை பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனம் கிரண் மஜூம்தார் ஷா பெற்றுள்ளார். யூஎஸ்வி என்ற மருந்து தயாரிப்பு தலைவர் லீலா காந்தி திவாரி மூன்றாம் இடத்தை பெற்றிருக்கின்றார்.
அன்சங் ஹீரோக்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்த அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் இந்தியாவில் பிறந்த நரேந்திர சிங் கயானி 1954-ஆம் ஆண்டு ஒளியின் மூலம் படங்களை முதன்முதலில் அனுப்பி அதி வேக இணைய தொழில்நுட்பத்தை அடித்தளம் அமைத்தார் இவரை ஃபைபர் ஒளியின் தந்தை என அழைப்பர் 2020 டிசம்பர் மாதம் இவர் காலமானார்
லண்டன் நாளிதழ் ஈஸ்டன் ஐ ஆண்டுதோறும் சிறந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது அந்த வகையில் உலகின் சிறந்த ஆசிய பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சோனுசூட் முதலிடம் பிடித்து இருக்கின்றார். மேலும் இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 6வது இடமும் ஏழாவது இடமும் கிடைத்திருக்கின்றது “லைஃப் ஆப் பை” திரைப்படத்தில் நடித்த பட்டேலுக்கு 4 ஆம் இடம் கிடைத்திருக்கின்றது.
2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த மனிதர்கள் பட்டியலில் டைம் இதழ் வெளியிட்டது அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இடம்பெற்றிருக்கின்றனர். 1927 ஆம் ஆண்டு முதல் டைம் இதழ் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை 2021 ஆம் ஆண்டு ஜப்பான் நாடு நடத்தும்.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பிற்கு சர்வதேசத்தின் கிங் பூமிபோல் உலக மண் தின விருது பெற்றது. டிசம்பர் 25 உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.