நடப்பு நிகழ்வுகள் வினா- விடை
நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் பயன்படுத்தலாம். நடப்பு நிகழ்வுகளின் வினாக்கள் தேர்வர்களுக்கு உதவிகரமா இருக்கும்.
1.இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் திறன் கொண்டது?
விடை: 5000 கிலோமீட்டர்
2. அக்னி 5 பாலிசிஸ்டிக் ஏவுகணை எந்த தீவில் இருந்து அனுப்பப்பட்டது?
விடை: அப்துல் கலாம் தீவு
3. அப்துல் கலாம் தீவு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை: ஒடிசா
4.அக்னி 5 ஏவுகணை செல்லும் தொலைவினை எவ்வாறு கணக்கிடலாம்?
விடை: சீனாவின் வட எல்லை வரையிலும் ஐரோப்பாவின் பகுதிகள் வரையிலும் அக்னி 5 செல்லும் செலுத்த முடியும்
5.தபால் நிலையங்களில் நவீன மயமாக்கல் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நவீன மயமாக்கல் திட்டம் 2.0
6.தகவல் தொழில்நுட்ப நவீன மயமாக்கல் திட்டம் 2.0 எதனை இணைக்கிறது
விடை: அறிவுபூர்வமான தளங்கள்
7.இந்திய மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு
8.இந்திய மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்ட நிர்வாகம் நிறுவனம் எது?
விடை: இந்தியா டுடே
9. 2022 ஆம் ஆண்டுக்கான சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் விடை: தமிழ்நாடு
10. மருத்துவம் விவசாயம் பொருளாதாரம் உட்கட்டமைப்பு கல்வி சட்டம் ஒழுங்கு ஆளுமை வளர்ச்சி தொழில் தொடங்குதல் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் எதற்காக இந்தியா டுடே ஆய்வினை தொடங்கியது
விடை: நாட்டில் உள்ள மாநிலங்களில் செயல்பாடுகளை பட்டியலிட
11. மாநிலங்களின் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்த தென்னிந்திய மாநிலம் எது?
விடை: கேரளா
இனிய மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
விடை 18 ஆவது இடம்
12. திவ்யகல் சக்தி 2022 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
விடை: கௌஹாத்தி
13. திவ்யகல் சக்தி 2022 யாருக்கு நடத்தப்பட்டது?
விடை: மாற்றுத்திறனாளிகளுக்கு
14. திவ்வியகல்சக்தி 2022 எதற்காக நடத்தப்படுகின்றது ?
விடை:வட கிழக்கு மண்டலத்தின் நடனம் பாடல் நுண்கலைகள் திறமை பெற்றவர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றது