போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற எண்ணம் கொண்ட அனைவருக்கும் நடப்பு நிகழ்வுகள் குறித்து அனைத்தும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். நடப்புநிகழ்வுகளின் வினா விடைகள் அவசியமானது. அப்பொழுதுதான் தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள முடியும்.
நாம் படிக்கும் ஒவ்வொரு அப்டேட்டும் தொடக்கம் அதன் தற்பொழுதைய நிலை வரை தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். தேர்வர்கள் 2019 முதல் தற்பொழுது வரை நடைபெற்ற நிகழ்வுகளை முழுமையாக ஒப்பீட்டு செய்து படிக்கும் பொழுது எளிமையாக நம்மால் அதனை வெல்ல முடியும்.
- ஜூலை 16 , 2021 ஆம் நாள் பிரதமர் எந்த ஹோட்டலை எங்கு திறக்கவுள்ளார்?
விடை: காந்தி நகர் ரயில் நிலையத்தில் ஐந்து நட்சத்திர விடுதியை திறக்கவுள்ளார்
2.4000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நினைவுச்சின்னம் எந்த நாட்டில் உள்ளது?
விடை: சிரியா
3. கர்நாடகாவில் கார்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை கொண்ட போர்டல் தொடங்கப்பட்டது அதன் பெயர் என்ன?
விடை: அகன்ஷா
4. தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள 2020-2021 ஜிடிபி வளர்ச்சி சதவீகிதம் எத்தனை?
விடை: -7.3 சதவீகிதம்
5. மதாத் மேப் எங்கு யாரால் உருவாக்கப்பட்டது?
விடை: அமெரிக்கா இந்தியா புலம்பெயர்ந்த மருத்துவர்கள் மற்றும் தொழில் குழுவினரால் உருவாக்கப்பட்டது இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவமனை படுக்கைகள் குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறலம.
6. மதாத் மேப் எந்த நடடிக்கைக்காக தொடங்கப்பட்டது?
விடை: கோவித்-19 நோயாளிக்களுக்கான மருத்துவ படுக்கை விவரங்கள் கொண்ட தளம்
7. இந்தியாவிலிருந்து மொத்தம் எத்தனைப் பேர் டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளனர்?
விடை: 228 பேர் சென்றுள்ளனர். 119 அதெல்ட்டிஸ், 67 ஆண்கள், 52 பெண்கள்
9 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை விளையாட்டில் விளையாட உள்ளது?
விடை: 18 விளையாட்டு நிகழ்ச்சிகள் 85 மெடல்களில் போட்டியிட உள்ளனர்.
10. அடுத்த கோடைகால 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் எங்கு நடைபெற்வுள்ளது?
விடை: பாரிஸ்