நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா சந்தைகள் இணைந்து லூப்ரிகான்ட் எண்ணெய் வணிக விரிவாக்கத்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் விமான ஆராய்ச்சி மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இந்தியா தான்சானியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டம் ஜூன் 29 அன்று நடைபெற்றது. ஆப்பிரிக்க நாடான தான்சாணியாவின் அருசா நகரத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
பிக் இன்பாக்ட் வருது 2023 சஞ்சீவ் ஜூனேஜா அவர்களுக்கு சிம்லாவில் வழங்கப்பட்டது
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பொருளாதாரத்தில் மனித தேவைகளின் குறிப்புகள்!
உலகம் மருந்து தரநிலை உச்சி மாநாடு 2023 ஆம் ஆண்டுக்கான மாநாட்டை துனிசியாவின் தலைநகரமான துனிஷ் என்னும் இடத்தில் நடத்தியுள்ளனர்.
உலக மருந்து தரநிலை உச்சி மாநாடு நோயாளிகளின் மையமாகக் கொள்ளும் வகையில் உற்பத்தி தரத்தின் புதிய நிலைபாடு ஆகியவற்றை கருவாகக் கொண்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய தேர்தல் ஆணையம் அசாம் மாநிலத்திற்கான தொகுதி மறு சீரமைப்பு ஆவணத்தை வெளியிட்டது மாநில மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளின் மாற்றத்தை உள்ளடங்கியதாக இது இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் சபை 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான கோப்பையை விண்வெளியில் அறிமுகப்படுத்தியது. இது பூமியிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதாகும். உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தும். இந்தியாவிற்கு வந்த பின்பு மேலும் 18 நாடுகளுக்கு இது செல்லப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெறுகின்றது
இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது மிகச்சிறந்த உலக பல்கலைக்கழகங்களில் 172 இடத்தைப் பெற்று இருக்கின்றது.
மேலும் படிக்க : TNPSC தேர்வு குறிப்புகள்