நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு
நடப்பு நிகழ்வுகள் போட்டித் தேர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கும். பொதுஅறிவுடன் நடப்பு நிகழ்வுகள் முக்கியபங்கு வகிக்கும். தமிழ்நாட்டில் , மற்றும் தேசிய அளவில் நிகழ்வுகளை நாம் துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
புன்னகை திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான “புன்னகை” என்ற புதிய பாடத்திட்டத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் பல் பராமரிப்புக்காக இத்திட்டம் ஆனது தொடங்கப்பட்டு உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக முதல் கட்டமாக பல் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளப்படுவார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய வாய் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
புன்னகை திட்டமானது பள்ளி மாணவர்களை பரிசோதித்து பல் சொத்தை வாய்வழி நோய்கள் மற்றும் ஈறு பிரச்சனைகள் குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டமானது செயல்படும்.
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி போட்டிக்கான வினா-வங்கி பயிற்சி!
மகளிர் தின விருதுகள் 2023
2023 ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதினை கமலம் சின்னசாமிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
கமலம் சின்னசாமி அவர்கள் ஊட்டியைச் சேர்ந்த 90 வயது எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.
மேலும் அவர் பல கவிதைகளையும் சுமார் 43 புத்தகங்களையும் எழுதி உள்ளார்.
11ஆம் வகுப்பு மாணவியான இளந்திரை என்பவருக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைக்கான அதிகாரம் அளித்தல் விருது ஆனது வழங்கப்பட்டது.
இளந்திரை, அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள மின் தூக்கிகளை பழுது பார்க்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலான ஒரு புதிய கருவியை இவர் கண்டுபிடித்து உள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டின் மாவட்டத்தின் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்த செய்ததற்காக திருவள்ளூர் ஆட்சியாளர் ஆல் பி ஜான் வர்க்கீஸ்க்கு முதல் பரிசனையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மேலும் படிக்க : போட்டி தேர்வை வெல்ல வினா-வங்கி தொகுப்பு படிங்க!
வீட்டிலிருந்தபடியே வாக்களித்தல்
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள தேர்தலில் தனது அடுத்த அரசை தேர்ந்தெடுக்கும் விதமாக இவ்வாக்களித்தல் உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக வீட்டிலிருந்தபடியே வாக்களித்தல் என்ற தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதியை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் இதுவே முதல் முறையாகும்.
‘சாக்ஷம்’ என்ற கைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த செயலியில் உள் நுழைந்து வாக்களிக்கும் வசதியை மக்கள் தேர்வு செய்து வாக்களிக்கலாம்.
மற்றொரு கைபேசியான ‘சுவிதா’ என்ற செயலியும் இதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான ஏற்ற இணையதளமாக இது அமைந்துள்ளது.
கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெறுவதற்கு வேட்பாளர்கள் இந்த தளத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆக்கம்
திருமதி தேவி வெங்கட்