நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு
நடப்பு நிகழ்வுகள் தினசரி கண்காணித்து குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் சரியாக செய்யும் போது நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வர்கள் நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக கண்காணித்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு மதிப்பெண்கள் அதிகமாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் தலைநகரில் கலிங்கா ஸ்டேடியத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த மிகப்பெரிய மனித சிவப்பு ரிப்பன் சங்கிலி உருவாக்கி இருக்கின்றனர்
எட்டாவது இந்திய சர்வதேச அறிவியல் கண்காட்சி போபாலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் அமிர்த கால் என்ற நிகழ்வை நோக்கி அணிவகுத்து செல்வது என்ற தலைப்பில் நடைபெற இருக்கின்றது.
இந்தியாவில் நோய் தடுப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க Co-WIN என்ற தளம் சிறப்பாக செயல்பட்டதை எடுத்து U-WIN என பெயரிடப்பட்ட மின்னணு பதிவேட்டை அமைக்க அரசாங்கம் பிரதி எடுத்துள்ளது.
மேலும் படிக்க : போட்டித் தேர்வுக்கான பொருளாதாரப் பாடக்குறிப்புகள்
இயற்கை விவசாயம் அதிக அளவில் விரிவடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. உலகின் உலகின் மொத்தமுள்ள 34 லட்சம் இயற்கை உற்பத்தியாளர்களில் 16 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து இயற்கை விவசாயம் செய்கின்றனர்.
பிரலய் எனும் ஒரு பெரிய ராணுவ பயிற்சியை இந்திய விமானப்படை உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே நடத்த உள்ளது. ஊடுருவல்களை கட்டுப்படுத்துவதற்காக இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது
ஆயுஷ்மான் பாரத் மற்றும் மத்திய அரசின் சுகாதார திட்டம் இரண்டும் தனித்தனி மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல்படும் ஆயுஷ்மான் பாரத் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டதாகும்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் புதிய வெளிப்புற கோள் கண்டுபிடித்து இருக்கின்றது. இந்த கிரகத்திற்கு LHS 475 b என பெயரிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் பகுதி 1!