போட்டித் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வின் தொகுப்பு!
போட்டித்தேர்வு என்பது சவால் நிறைந்தது. கவனமாக யுக்தியை கையாண்டு படிக்க வேண்டிய ஒன்றாகும். போட்டித் தேர்வுக்குப் படிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டியவை, போட்டி தேர்வுகுறித்த முழு போக்கை அறிந்து அதற்கேற்றார் போல் திட்டமிட்டு படிக்க வேண்டும்.
ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். திரு. அஸ்தானா சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தில் இயக்குனர் பணியில் இருக்கின்றார்.
கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான விபத்து பற்றி விசாரிக்க ஏஏஐபி விசாரணைக்குழு ஆகஸ்ட் 13, 2020 உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த குழு 5 பேர் கொண்டது
இந்தியாவில் வெள்ள அபாயம் குறித்து முன்ன முன்னரே அறிவிக்க கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர் ஆணையம் இணைந்து பணியாற்றும் கூகுள் மற்றும் மத்திய நீர் ஆணையம் சுமார் 1000 ஸ்ட்ரீம் அளவீடுகளை ஒரு மணி நேரம் அடிப்படையில் நீரில் அளவிடும் இது மக்களுக்கு எச்சரிக்கையை முன்னரே அறிவிக்கும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்காக “பதாய் துஹார் பரா” திட்டத்தை சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலே அறிவித்திருக்கின்றார். கொரோனா காரணமாக பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள இத்திட்டம் உதவுகின்றது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் நூறாண்டு காலம் ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கின்றது. இதனை குறிக்கும் வகையில் மேக் இன் இந்தியா என்ற டிஜிட்டல் பிரச்சாரம் தொடங்குகியது. நாட்டின் தனித்துவம் விளையாட்டு மரபு, ஒற்றுமையின் மதிப்பு, நட்புடன் பழகுதல் இந்த டிஜிட்டல் மீடியா பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லும்.
இந்தியா இளைஞர் கழகம் ஃபிட் இந்தியா யூத், முயற்சியை அரசு உருவாகியிருக்கின்றது ஃபிட்டாக இருப்பது இதன் நோக்கமாகும் உடற்பயிற்சி முக்கியத்துவம் விழிப்புணர்வை அடிப்படையாகக்கொண்டு, இளைஞர்களிடம் இது தாக்கத்தை உண்டாக்கும்
தேசிய ஊட்டச்சத்து திட்டம் அக்டோபர் 15ஆம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகின்றது இந்தியாவில் அக்டோபர் 15ஆம் தேதி சம்புஸ்த கேரளம் என்ற ஒரு தேசிய ஊட்டச்சத்து திட்டம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் சேவா போஜ் யோஜனா திட்டம் இயங்குகின்றது இது மாதத்திற்கு 5000 நபர்களுக்கு இலவச உணவு வழங்கும் அனைத்து மத தொண்டு நிறுவனங்களுக்கும் சிறப்பு நிதியியல் உதவி வழங்க மத்திய கலாச்சார அமைச்சகம் இத்திட்டத்தை உருவாகியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு மாடு வளர்க்க நாட்டு மாடு வளர்ப்பவர்களை இணைக்கும் இ-பாஸ் ஹாட் போர்ட்டல் மத்திய அரசு தொடங்கி இருக்கின்றது.
U-20 கால்பந்து கோப்பையை அர்ஜென்டினாவை இந்தியா 2-1 என்ற வீதத்தில் வென்றது