செய்திகள்தமிழகம்

அபாயம்! ‘தீவிரமாக பரவும் தொற்று’ தளர்வுகளால் எதிரொலி.

குளிர்சாதன வசதி கொண்ட உள்அரங்குகள் மற்றும் அலுவலகங்களில் அதிதீவிர தொற்று பரவ ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து அரசு கூடுதல் கவனத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முக கவசம் அணிந்து இருந்தாலும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்போருக்கு 5 முதல் 10 சதவீதம் தொற்று பரவுகின்றன. உட்புற அரங்குகளில் 90 சதவிகிதம் வரை பரவுகின்றன. இதை தடுக்க எளிய நடை முறைகளை பின்பற்றினாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உள்ளரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அலுவலகங்களில் கூட்டமாக அமர்ந்து வேலை செய்வது, உணவு உண்பது உள்ளிட்டவற்றால் சூப்பர் ஸ்ப்ரெடிங் காரணம் நிகழ்கிறது என்கின்றனர். சென்னையை பொருத்தவரை செப்டம்பர் 23 வரை சீராக இருந்த கொரோனா பாதிப்பு இதன் பிறகு அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த வேகத்துக்கு சூப்பர் ஸ்ப்ரெடிங் இவன்ட் எனப்படும் அதிதீவிர தொற்று பரவல் தான் காரணம் என்கின்றனர்.

புள்ளியியலாளர்கள் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் ஐந்தாம் கட்ட தளர்வுகள் அழிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. ஊரடங்கு அதிக தளர்வு எதிரொலியாக அதிதீவிர தொற்று பரவல் ஏற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *