செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தரும் நற்செய்தி

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒர் நற்செய்தி. ஹார்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்த கிரிக்கெட் வாரிசு தயாராகுமா? ஆம் பிறந்தது ஆண் மகன். ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன கிரிக்கெட் விளையாட்டிற்கு பாலினம் ஒரு தடையா!

ஹார்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியில் பவுலிங் பேட்டிங் பீல்டிங் என பன்முக விளையாட்டு வீரராக திகழ்பவர். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் ஆவலுடன் பார்க்கக்கூடிய டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியாவை அனைவரும் ரசித்திருப்பார்கள்.

கிரிக்கெட் விளையாட்டின் முக்கியமான தொடர் போட்டியான டெஸ்ட் விளையாட்டுகளில் தன்னுடைய பங்கை சரிவர தந்து வரும் ஹார்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சையால் 2019ஆம் ஆண்டில் மூன்று மாத இடைவெளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2020 டி20 இவரை எதிர்பார்க்க கொரோனா வந்து கெடுத்து விட்டது. அடுத்தது செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் டி20யில் இவரை ரசிப்பதோடு கிரிக்கெட்டையும் ரசிக்கலாம்.

நடாசா ஸ்டான்கோவிக்

ஹார்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் யார் என்று தெரியுமா!

நடிகை மாடல் மற்றும் நடன கலைஞராக விளங்குபவர் நடாசா ஸ்டான்கோவிக். இவர் செர்பியா நாட்டில் பிறந்து அந்த நாட்டின் குடியுரிமை வாங்கியவர். இவர் ஹிந்தி படங்களில் கேமியோ வேடங்களில் நடித்து வரும் திரை பயணத்தில் முன்னணி கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் படமான அரிமா நம்பியிலும் பாடல் காட்சிக்காக ஆடி நடித்துள்ளார்.

சமூக வலைத்தளம்

2020 ஜனவரியில் ஹார்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிக் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நிகழ மே மாதம் திருமணம் நிகழ்ந்தது. இதற்கு நடுவில் காதலர் தினத்தை முன்னிட்டு அருமையான புகைப்படத்தை வெளியிட்டு ‘காதலிப்பவர்களுக்கு 14 பிப்ரவரி மட்டும் தான் அல்ல தினமுமே காதலர் தினம்தான்’ என்பதை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார் ஹார்திக் பாண்டியா.

ஊரடங்கு காலகட்டத்தில் தன்னுடைய மனைவி கருவுற்றிருக்கும் செய்தியையும் வெளியிட்டிருந்தார் ஹார்திக் பாண்டியா. அதனைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இன்று 30 ஜூலை 2020 தமக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்தவாறு புகைப்படத்தை எடுத்து ‘நாங்கள் எங்கள் பைய குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம்’ என ஆங்கிலத்தில் அந்தப் புகைப்படத்தின் கீழ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் மற்ற சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் சக விளையாட்டு வீரர்கள் இவருக்கு வாழ்த்து மழையை பொழிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மக்களே இந்தத் தம்பதியர்களுக்கு மனமார வாழ்த்துக்களைப் பகர்ந்துடலாமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *