ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய முன்னாள் வீரர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜகவின் டெல்லி தொகுதி எம்.பி கௌதம் காம்பீர். ஒரு கோடி நன்கொடையை அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு வழங்கியுள்ளார். இந்தியர்களின் கனவாக இருந்தது ராமர் கோவில்.
தற்போது இதற்கான வாய்ப்பு சுமுகமாக பிரச்சனை தீர்ந்து ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் ராமர்கோவில். தங்கள் குடும்பத்தின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக சிறு தொகையை நன்கொடையாக வழங்குவதாக கூறுகிறார் கௌதம் காம்பீர்.
ரூ.10 முதல் பெரிய தொகையையும், ஆயிரம் ரூபாய்க்கு காசோலை மூலமாக வசூலித்து வருகிறார் கௌதம் காம்பீர். பொதுமக்களின் பங்களிப்பு ராமர் கோவிலில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நன்கொடைகளை திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.