கொரோனா அதிகரிக்கும் அபுதாபியில் ஐபிஎல் நடைபெறுமா?
ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடருக்கு அட்டவணை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றன.
அபுதாபியில் கொரோனா அதிகம் பரவி வருவதை கட்டுப்படுத்த அமீரகத்திற்கு வரும் அனைத்து நுழைவு வாயில்களிலும் தோற்று பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதே வேளையில் அபுதாபி மைதானத்தை தவிர்த்து விட்டு போட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அபுதாபியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று சேர்ந்து விட்ட நிலையில் அமீரகத் தலைநகர் அபுதாபியில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகின்றன. இக்காரணத்தால் அங்கு உள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இயலுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளன.