அதிகரிக்கும் கொரோனா.ஆபத்தில் மக்கள்
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா என்னும் வைரஸ் தொற்று.. இந்த வைரஸ் தொற்றினால் அனைத்து மக்களின் வாழ்விலும் ஒரு மிகப்பெரிய பூகம்பமே வந்து ஓய்ந்துவிட்டது… இரண்டு வருடமாக மக்களை தன் பிடியில் வைத்திருந்த கொரோனா அரக்கன் கடந்த சில மாதங்களாக தன் பிடியிலிருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்தது. மக்களும் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்..
கோர தாண்டவம் ஆடும் கொரோனா
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா என்னும் கொடிய நோய் கோர தாண்டவம் ஆடத் தொடங்கி உள்ளது. தொற்று பாதிப்பு 10 விகிதத்தை தாண்டும் பொழுது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்…
தற்போது இந்திய அளவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.தமிழக அளவில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் 295 , செங்கல்பட்டில் 122 ஆக உள்ளது .
50 முதல் 100 படுக்கைகள் தயார் நிலையில்
எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக50 முதல் 100 படுக்கைகளை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் முக கவசம் தனிநபர் இடைவெளி வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்தல் என பல்வேறு முன்னேற்பாடுகளை சுகாதாரத் துறை செய்து வருகிறது..
அனைவரும் மிகக் கவனமாக இருந்து தங்களையும் தங்களை சுற்றியுள்ளவர்களையும் தெற்று பாதிக்காமல் பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள்… முடிந்தவரை முக கவசம் அணியாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்..