பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
ஜனவரி 19 முதல் 10, 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஆக தமிழக அரசு அறிவித்திருந்தது. வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், எல்லா மாணவர்களும் பள்ளிக்குள் வரும் போதும், பள்ளி முடிந்து செல்லும் போதும் முகக் கவசத்தை கட்டாயம் அணிதல் வேண்டும். எழுத்துப்பூர்வ இசைவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தனியார் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்த பிறகு பள்ளிகளை திறக்க அனுமதி உண்டு.
கட்டுப்பாட்டுடன் கூடிய மண்டலத்தில் வசிக்கும் மாணவ- மாணவியர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதி இல்லை. கட்டுப்பாடுகள் இல்லாத மண்டலங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இணையவழி கற்றல் முறை மாற்று கற்பித்தல் முறையாக தொடரலாம். இணையத்தின் வழியாக பள்ளிகள் வகுப்புகளை நடத்தும் போது சில மாணவர்களை மட்டும் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட, இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அவ்வாறு கலந்து கொள்ளவும் அனுமதிக்கலாம்.
மாணவர்கள் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்தின் மூலமாக பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்க அனுமதிக்கலாம். பெற்றோர்களை சார்ந்தே மாணவர்களின் வருகை இருக்க வேண்டும். முன்னேற்றத்திற்கு தகுந்த முறையில் கற்றல் திட்டமிடுதல் அவசியம்.
சுகாதாரத் துறையால் துத்தநாக மாத்திரைகள் மற்றும் விட்டமின் மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறக்கும் போது வழிகாட்டு நெறிமுறைகள் இவற்றை நிலையான முறையாகப் பின்பற்ற வேண்டும்.