கோவிட் நபர்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
பரவலாக இருக்கும் கோவிட்

இன்று பரவலாக இருக்கும் ஒரு பேச்சு ‘கோவிட்’. இதற்கு முறையான சிகிச்சைகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் இதற்கான சரியான உணவுமுறை பழக்கம்தான் என்ன? மருத்துவர்கள் பரிந்துறைக்கும் உணவு பட்டியல்கள் எவை எவை? என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கருப்பு கொண்டைகடலை

குளுக்கோஸ் அதிகமாக கோவிட் நோயாளிகளுக்கு தேவைப்படுவதால், கருப்பு கொண்டைகடலை ஓர் அற்புதமான உணவாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சுண்டல் என்றாலே கருப்பு சுண்டல்தான் நம் பாரம்பரிய மண்ணின் சுண்டலாகும்.
சிட்ரஸ் உணவுகள்

சிட்ரஸ் உணவுகளான எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் உணவுகளை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு உரியது என்று மருத்துவர்கள் பரிந்துறை செய்கின்றனர்.
பால்

தூய பசும்பால் ஓர் அற்புதமான ஊட்டச்சத்தாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடைகளகல் விற்கப்படும் பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்களை தொற்றிலிருந்தீ வெளியே வரும்வரை தவிர்ப்பது நல்லது.
பாதாம்

பொதுவாக மக்களிடையே ஏற்பட்டு இருக்கும் தொற்றை எதிர்த்து போராட அவரவர் உடலின் எதிர்ப்பாற்றல்கள் எதிர்த்து சண்டையிட அதிகமான ஊட்ட்ச்சத்து பொருட்கள் தேவைபடுவதால், பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளை சேர்த்திக் கொள்வது நன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
பிற மருத்துவ முறைகளை பின்பற்றுவோர் தவிர்க்க வேண்டும்

மேற்கண்ட உணவுமுறைகள் அனைத்தும் அல்லோபதி மருத்துவர்கள் பரிந்துறை செய்த உணவு முறைகளே. இவை அனைத்தும் அல்லோபதி சிகிச்சை முறையை பின்பற்றுபவர்களுக்கே சரியானதாக இருக்கும். ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்போர்க்கு இந்த உணவுமுறை சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆகவே எந்தெந்த மருத்துவ சிகிச்சைக்கு எந்தெந்த உணவுமுறை சரியானதாக இருக்கும் என்று அவரவர் சிகிச்சை எடுக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நன்மையை அளிக்கும்