கோவித்-19 இல்லா நியூசிலாந்து அறிவித்துள்ளது
நியூசிலாந்தில் என்ன மாயம் நடந்தது. எப்படி ஒழிந்தது கொரானா உலகம் முழுவதும் தாக்கத்தால் உலகமே முடங்கிக் கிடக்கின்றன. அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக இருக்கின்றது. இதுவரை இந்தியாவில் மட்டும் 5 கட்டங்களாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகின்றது.
கோவித்-19 இன் தாக்கம் இந்த வருடம் முழுவதும் இருக்குமென்று சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நியூசிலாந்து கொரானா இல்லாத நாடாக மாறியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்த வண்ணம் உள்ளன. தெற்கு பசிபிக் நாடான நியூசிலாந்து கடந்த பிப்ரவரி 28 இல் கோவித்-19 தொற்றால் பாதிப்படைந்தது. நியூசிலாந்து 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்கு மே 14 வரை ஊரடங்கு பின்பற்றுபட்டு வந்தது.
கோவித்-19 தொற்று தற்பொழுது வரை புதிதாக ஏதும் பதிவாகாத நிலையில் ஊரடங்கு தளர்வு முழுமையாக தகர்க்கப்பட்டது. நியூசிலாந்தில் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கொரானாவின் தாக்கம் நியூசிலாந்தில் முழுமையாக இல்லை என அந்நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார் . இந்நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் ஆனால் சமூக இடைவெளிகள் என்பது சற்று பின்பற்றப்பட வேண்டும், என்று கூறப்பட்டாலும் அது குறித்து முழுமையாக சட்டங்கள் கடுமையாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வழக்கம்போல் வாகனங்கள் வர்த்தக நிறுவனங்கள் அலுவலகங்கள் இயங்குகின்றன என்பது மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றாகும். நியூசிலாந்தில் எந்தவித கோவித்-19 தொற்றும் தற்போது பதிவாகவில்லை என்பது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அந்த நாடு அறிவித்துள்ளது. அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாட்டின் மக்களும் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.