ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
வங்கிகள் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையிலேயே ரிசர்வ் வங்கி கள்ள நோட்டு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை கைப்பற்றிய கள்ள நோட்டுகளின் தகவல்கள் சேர்க்கப்படவில்லை. 2019-20 ஆண்டு நிதியில் 500 ரூபாய் கரன்சியில் சுமார் 30054 கள்ள நோட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த 2018-19 ஆண்டை விட சுமார் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டன. 200 ரூபாய் கரன்சியில் மொத்தமாக 31969 கள்ள நோட்டுகள் அடையாளம் கண்டுள்ளன. கடந்த ஆண்டை விட சுமார் 156 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டன.
கடந்த 2014 நவம்பரில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக 200 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
கள்ளநோட்டு பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக இந்த கரன்சிகளை அறிமுகம் செய்துள்ளது என்று அரசு விளக்கம் கொடுத்து இருந்தது நாம் அறிந்ததே. புதிய கரன்சியிலும் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2019-20 ஆம் நிதியாண்டில் மட்டும் 200 ரூபாய் கரன்சியில் கள்ள நோட்டுகளின் புழக்கம் கடந்த நிதி ஆண்டை விட 151 சதவீதம் அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டன.