கொரோனா காரணமாக மாநிலங்களுக்கு உதவும் மத்திய அரசு
கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவி அனைவரையும் படுத்தி எடுத்து விட்டது கடந்த மூன்று நான்கு மாதமாகக் கொரோனாவால் லாக்டவுன் காரணமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ் படம் எந்த வேலையானாலும் வழியில் வந்து செய்ய வேண்டும் இந்த நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 3கோடி மாஸ்க் வழங்கியிருக்கின்றது.

சுய பாதுகாப்பு கவச உடைகளையும் கருவிகளையும் சுமார் ஒரு கோடி அளவு கொடுத்திருக்கின்றது. நாடு முழுவதும் 10 கோடி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை வழங்கியிருக்கின்றது.
மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொரோனா வைரஸ் சிகிச்சை காரணமாகப் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தந்திருக்கின்றது. மாஸ்க் அணிதல் இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மத்திய அரசு இதனை மாநிலங்களுக்கு இலவசமாகக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும.

மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள இந்த உதவியானது மாநிலங்களுக்கு ஒரு பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்று நம்பபடுகின்றது. இதுபோல் மத்திய அரசின் கரம் நீண்டு இருக்கும்பொழுது நாட்டில் மாநிலங்கள் இக்கட்டான சூழலை எளிதாகக் கையாலலாம். மத்திய அரசு மாநில அரசும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்படும் சூழலை எளிதாகக் கட்டுப்படுத்த முடிகின்றது. அவ்விதமாகக் கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தும் நோயை எளிதாக இந்தியா எதிர்கொண்டது .