என்னடா இது அமைச்சர்களுக்கு வந்த சோதனை
தமிழ்நாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
இது மக்களை அச்சுறுத்தும் ஒரு தாக்கமாக கருதப்படுகின்றது. அமைச்சர்களுக்கே இந்த கதி என்றால் அன்றாடம் வீதியில் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள் கதியைப் பற்றி ஒரு நிமிடம் நாம் யோசிக்கத் தான் வேண்டும்.
விடிந்தும் விடியாததுமாக தற்போதெல்லாம் வீட்டை சுற்றி கீரை வேண்டுமா கீரை, பூ வேண்டும் பூ, மற்றும் பழங்கள் காய்கறிகள் என கூவிக் கூவிக் அன்றாட அவசிய தேவைகள் அனைத்தும் கூறுப் போட்டு வியாபாரம் செய்பவர்கள் காய்கறி வியாபாரிகள்.
இவர்களின் கதி என்னவாகும். நம் உடலில் பலமும் மனதில் உறுதியும் இருந்தால் எதையும் எதிர் கொள்ளலாம். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை கல்வி அமைச்சர் அன்பழகன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள், கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் என்று முன்னரே நமக்குத் தெரியும்.
இந்த லிஸ்டில் கல்வியமைச்சர் அன்பழகன் கொரோனாவின் பிடியிலிருந்து குணம் ஆகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிலோபர் கபில் அவர்களின் மருமகன், மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இவரும் அந்த நோய்க்கு ஆட்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் ஆட்டம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று 4,500 பேர் தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர்.