கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கவனம்
கொரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருட காலமாக உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனுடைய தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனை அடுத்து நோய் தொற்று அதிகரித்து வருகின்றது அதற்கு உலக சுகாதார நிறுவன தலைவர் மக்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவித்திருக்கின்றார்.
தொடர்ந்து தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. ஜெனிவாவில் உலக சுகாதாரம் நிறுவனத் தலைவர் இனிவரும் நாட்களுக்கு நோய்த் தொற்றுகளுக்கு எதிராக மக்கள் பெரும் சவாலைச் சந்திக்க நேரிடும் சுகாதாரம் பேண வேண்டியது அவசியமாகின்றது.
பொது சுகாதார நடவடிக்கைகளைத் துரித கதியில் செய்து முடிக்க வேண்டும் உலக அளவில் 2 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி இரண்டு பேர் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் உலகம் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அனைத்து பணிகளும் வீட்டிலிருந்தே செய்ய வேண்டுமென்பதால் பல நேரடி பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பெரும் இளப்பை பல நாடுகள் சந்தித்து வருகின்றன.
உற்பத்தி குறைந்தால் பொருட்களின் பற்றாகுறையும் நுகர்வுக்கு தட்டுப்பாடு வரும் இதனால் தேவை நிறைவேறாமல் போகும் என பல்வேறு கணிப்புகள் நம்மைச் சவாலான சூழலில் தள்ளுகின்றது.
இதற்கு அரசும் பொதுமக்களும் தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்திக் செல்ல வேண்டும் என்பது முக்கியமாகின்றது. சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் பொது சுகாதாரம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.