மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோன வைரஸ் பரிசோதனை
கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் மாவட்டங்களுக்கு மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி உள்ளது. இன்று முதல் 30ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.
இன்று முதல் ஒரு மாவட்டதிலிருந்து இன்னொரு மாவட்டம் செல்ல வேண்டுமானால் இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, உள்ளிட்ட தனியார் வாகனங்கள், ஒரு மாவட்டதிலிருந்து இன்னொரு மாவட்டம் செல்ல அனுமதி இல்லை.
உலகில் 95,20,134 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 4,83,958 பேர் கொரோனா தொற்றினால் மரண மடைந்துள்ளனர்.
உலகில் கொரோனாவில் இருந்து 51,69,213 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உலகிலேயே கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் தான் அதிக பேர் பலியாகி உள்ளனர். 1,24,280 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 24,63,206 பேர் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். பிரேசிலில் 11,92,474 பேர் தொற்றால் பாதிப்பு அடைந்ததாகவும், ரஷ்யாவில் 6,06, 881 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பில் உள்ளனர்.
இந்தியாவில் 4,72,985 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகினர். உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக பிரேசிலில் ஆயிரத்து 103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 807 பேரும், மெக்சிகோவில் 793 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 424 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,907 ஆக உயர்வு கண்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோன வைரஸ் பரிசோதனை தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பரிசோதனைகள் செய்வது என்பது தொடர்பு தடம் அறிந்து, சிகிச்சை அளிப்பதும் கொரோனாவை தடுக்க முடியும். இதனால் அனைத்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் ஏழு நாட்களுக்குள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.