தில்லியில் பெருகிவரும் கொரோனா மீண்டும் ஊரடங்கா
தில்லியில் கொரோனா தொற்று பெருகி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக மீண்டும் பொது முடக்கம் ஏற்படுமா என்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.
- டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
- கொரோனா காரணமாக மீண்டும் பொதுமுடக்கம் வருமா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
டெல்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்த படுமா என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தலைநகரில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 3635 பேருக்குக் கொரோனா தொற்றானது உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கோவித்-19
கோவித்-19 காரணமாக கிட்டத்தட்ட 95 பேர் உயிரிழக்கின்றனர் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தலைநகரில் மொத்தம் கொரொனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 7614 பேர் ஆவார்கள். எனினும் புதுடில்லி அரசாங்கம் இதுகுறித்து வெளியிட்ட தகவலின்படி நடவடிக்கைகளை அரசு முறையாக எடுத்துக்கொண்டு வருகின்றது.
மேலும் படிக்க : 89 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று
பாதுகாப்புடன் இருக்க அறிவுரை
மேலும் இதுகுறித்து தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். தூய்மை சமூக இடைவெளி ஆகியவை வலியுறுத்தப்பட்டு உள்ளது என்று டெல்லி சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தலைநகர் பகுதியில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.