கொரோனா சிகிச்சை பெற்று குணமாவோர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தின் இது போன்ற அதிக எண்ணிக்கையில் குணமாவர்கள் பெரிய கொண்டே சென்றால் வெகுவிரைவில் தமிழ்நாடு முழுவதுமாகச் சீராகும் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் எந்த அளவுக்குப் பாதிப்பு அதிகரித்தது அதே அளவிற்கு குணமடைவார்கள் எண்ணிக்கையும் ஆகின்றது. தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல்களும் கிடைக்கின்றன. கொரோனாவினால் ஆயிரக்கணக்கில் குணமாவோர்கள் போல் நூற்றுக்கணக்கில் இறக்கவும் செய்கின்றனர்.
இதுவரை தமிழ்நாட்டில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னையில்தான் அதிகமான பாதிப்பு, தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர. பொதுமக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ள அரசு, ரேசன் கார்டு கொண்டவர்களுக்கு ஆக்ஸ்ட் 5 தேதிவரை அதனை இலவசமாகக் கொடுக்கின்றது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அரசு முழுமையாக மக்களை வலியுறுத்துகின்றது. மெல்ல தியேட்டர்கள், மால்கள், கோவில்கள் திறக்க அரசு உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.