அதிர்ச்சியை தரும் கொரோனா தடுப்பு மருந்து அடுத்தது என்ன!
குட்டையைக் குழப்பும் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் சுமார் 180 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போடும் பணியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
தடுப்பு மருந்து இருவர் மரணம்
இந்தியாவில் தடுப்பூசி பக்கவிளைவை உருவாக்கியிருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம், கர்நாடக மாநிலம் சேர்ந்த இருவர் இறந்திருக்கின்றனர். நாடு முழுவதும் 480 266 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து அரசு நடவடிக்கைகளை முடித்துவிட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மட்டும் 551 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8 லட்சத்து 31 ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 158 இன்று பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.