மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. தலையை வெளியே காட்ட முடியாமல் மக்கள் வீட்டுக்குள் முடக்கம்
கடந்த மூன்று வருடமாக மக்களை துரத்தும் கொரோனா இடையில் சற்று குறைந்தது… எனவே மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் முன்னேறி வருகின்றனர்.
ஆனால் போனா மச்சான் திரும்பி வந்தான் என்ற சொலவடைக்கு ஏற்ப மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது.. கடந்த வாரங்களில் 22 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை தற்பொழுது 100 ஐக் கடந்து சென்று விட்டது.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது அதேபோல் செங்கல்பட்டில் 32 பேருக்கு தோற்று பாதித்துள்ளது.. எனவே சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா பரவல் என்பது சமூக பரவலாக மாறியதால் தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதனை சமாளித்து வாழ பழகிக்கொள்ளவேண்டுமே தவிர, கொரோனா முற்றிலும் போய்விட்டது என்று எண்ண கூடாது.
மக்கள் தன்னோழுக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் தங்களை மட்டுமல்ல தங்கள் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்ற முடியும். எனவே அனைவரும் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்..