கொரோனா பரவல் குறைவல்:- மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்ரை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக ஊரடங்கு, பள்ளிகள் திறப்பால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் சிலர் வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனைதொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து வழக்கமான செயல்பாடுகளை தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் வழக்கமான செயல்பாடுகளையும் தொடங்கிவிடலாம், ஆனால் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 4வது அலை மே மாதம் தாக்கும் என்று கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் கூறிய நிலையில், மக்களின் பொருளாதாரம் மற்றும் பிற காரணங்களுக்காக மத்திய அரசு தளர்வுகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.