தமிழ்நாட்டில் கொரானா அவலம்
தமிழ்நாட்டில் அடுத்த, அடுத்து கொரானா படுத்தி எடுத்து வரும் காரணமாக விழிபிதுங்கி நிற்கும் தமிழக அரசு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இல்லை பரபரப்பு புகார்கள் டுவிட்டரில் பேசப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 1875 பேர் தமிழகத்தில் கோவித்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. சென்னையில் மட்டும் 1407 பேர் கொரானா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல்களும் கிடைத்த வண்ணம் உள்ளன.
இதை வைத்து தமிழகத்தில் அரசியல் பேசி கூத்தாடும் அரசியல் அரசியல்வாதிகளுக்கும் கொரானாவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. அரசு முடிந்தவரை தன் பங்கினை ஆற்றி வருகின்றது. கோவித்-19 தொல்லைகள் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் சதுரங்க விளையாட்டை நிறுத்திவிட்டு மக்களின் உயிரைப் பற்றி கவலை கொள்ள வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
கொரானா சிக்கல்:
சமீபத்தில் சென்னையில் இறந்த 200 பேரின் தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்று சர்ச்சையும் கிளம்பியுள்ளது இதேபோல் டெல்லியில் கிட்டத்தட்ட 1400 பேரின் அதிகாரபூர்வ இறப்பு தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை நாடு எந்த நிலையை நோக்கி செல்கின்றது, என்ற அச்சம் விவரம் தெரிந்தவர்களை எல்லாம் ஆட்டிப் படைக்கின்றது. நாட்டையும் ஒடுக்கி வருகின்றது.
இது தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மேலும் ஊரடங்கு கசக்கிப் பிழியும் அளவிற்கு இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது இனியும் எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாதுகாப்பிற்கு பங்கம் வரரும் எந்த ஒரு நிலையையும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் போர்க்கால நடவடிக்கையாக செய்யும் என்பதை மறுப்பதற்க்கில்லை.