கொரோனா ஆய்வுத் தகவல்கள் அறிவோமா!
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக நாட்டு மக்கள் மிகுந்த சிக்கலில் இருக்கின்றனர். தங்களது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீட்டில் இருந்து வேலை செய்தல் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும், இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோய் மக்களை பெருமளவில் பாதிக்கின்றது.
இந்தியாவில் மெட்ரோ சிட்டிகளையடுத்து பெங்களூர், ஹைதராபாத் போன்ற வளர்ந்து வரும் நகரங்களும் இந்த வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் டொராண்டோ பல்கலைக்கழகம் இவர்கள் நடத்திய ஆய்வுகளின் வெளியான தகவல்களை காண்போம்.
கொரோனா வைரஸ் தாக்குதல் இருமல் காய்ச்சல் ஆகியவற்றால் வருகின்றன. இந்தத் தாக்குதலானது சுவாசத்திலிருந்து ஆரம்பமாகின்றது சுவாசம் காற்றில் பரவுவதன் மூலம் நோய்தொற்று அதிகரிக்கின்றது. இருமும் போதும், தும்மும் போதும் ஏற்படும் நீர் துளிகள் கொரானா தொற்று அதிகரிக்க காரணமாக இருக்கின்றன. இரும்பும் போதும் வெளியாகும் நீர் துளிகள் மூலம் எளிதாக கொரோனா வைரஸ் தோற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
நமது சுவாசத்தின் மூலம் வைரஸ் ஆனது எட்டு அடி முதல் 13 அடி வரை செல்லும் திறன் படைத்ததாக இருக்கின்றது. இவை காற்றில் கலந்துவிடும், மனிதர்களிடம் தொற்றிக்கொள்ளும், நாம் என்னதான் சமூக இடைவெளிகள் கடைப்பிடித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் மூலம் இதன் பரவலை தடுப்பது என்பது கடினமாக இருக்கின்றது எனத் தகவல்கள் கிடைக்கின்றன.
கொரோனா வைரஸ் குளிர்காலத்தில் நம்மை அதிகம் தாக்கும் என்ற தகவகள் கிடைக்கின்றன. ஆய்வு விவரங்களில் ஈரப்பதமான சூழலில் கொரோனா ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. குளிர்ந்த வெப்பநிலையும் அதற்கு சாதகமாக இருக்கின்றன. ஈரப்பதமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் வாழ உகந்த இடமாக இருக்கின்றது. மேலும் ஆராய்ச்சிகள் கொடுக்கின்ற தகவலின்படி முகமூடிகள் அணிந்தாலும் இதன் பரவல் தடுப்பு என்பது சற்று சவாலானாதுதான் என தகவல்கள் கிடைக்கின்றன.
எது எப்படியோ இருக்கட்டும் ஆரோக்கியமான உணவு நல்ல உடற்பயிற்சி மற்றும் மிளகு ரசம் இந்திய தரமான மசாலா பொருட்கள் உணவில் எடுத்துக் கொண்டாலே எந்த நோய்த் தொற்றும் நம்மை அண்டாது. இதை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ நாம் உணவில் சேர்க்கும் இந்த உணவே மருந்து கொள்கை நம்மை காக்கும் மருந்துகள் தேவையில்லை என ஆயுர்வேத மருந்துகளும், சித்த மருத்துவமும் தெரிவிக்கின்றன. என்னதான் நடக்கும் பார்ப்போம், நம்மால் இயன்ற அடிப்படை உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதே சிறப்பு தினம்தோறும் நெல்லிக்காய், மிளகு ரசம், இஞ்சி சாறு, கசாயம் குடித்து வருதல் உடலுக்கு எந்த ஆபத்தையும் தராது உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.