கோவையில் கோட்டை கட்டும் கொரோனா அச்சத்தில் மக்கள்
என்ன கொடுமையடா இது என்று கேட்கும் அளவிற்கு கோவையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. எப்பா சாமி தாங்கலடா, என்றபடி பார்த்தாள் ஒருநாளுக்கு 238 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இப்படியே போனால் இன்னும் அதிகமாகக் கொரானா தொற்று பாதிக்கும் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. கோவையில் ராக்கியபாளையம், மேட்டுப்பாளையம், பீளமேடு, நஞ்சுண்டபுரம் சிங்காநல்லூர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகின்றது.
கோவையில் கடந்த 4 நாட்களில் 721 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கோவையில் குனியமுத்தூர், போத்தனூர் மதுக்கரை, முருகம்பாளையம், குறிச்சி, கரும்புக்கடை, கோவை புதூர் போன்ற பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவல் பெருகியது.
கோவையில் கொரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்தில் உள்ளது 198 பேர் பாதிப்படைந்த குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஐந்து பேர் இதுவரை இறந்துள்ளனர் என்று தகவல்கள் கிடைக்கின்றன. கோவையில் இன்னும் இதன் பாதிப்பு அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எப்பா சாமி தாங்க முடியல ஏதாவது மருந்து கொடுத்துக் காப்பாத்துங்க என்று பலர் கேட்பது நமக்கு நீதியின் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை நகரம் சென்னைக்கு அடுத்த தமிழ் நாட்டில் மிகமுக்கிய வளர்ச்சி பெற்ற நகரமாகும். கோவையில் தற்பொழுது மக்களிடையே கொரோனா நோய் பரவல் அதிகரிக்கின்றது. இதனை அடுத்து மேலும் அதிகரிக்கும்பொழுது சிகிச்சை கொடுக்கத் தேவைப்படும் அனைத்து தேவைகளும் அரசு தயாராக வைத்திருக்கின்றது.