கொரோனா இரண்டாம் அலை மஹாராஷ்டிரா!
மகாராஷ்டிரா மீண்டும் அலை அடிக்கும் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா கொரோனா அலை பெரிய அளவில் இருக்கின்றது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகளவிலான தொற்று பாதிக்கப்பட்டிருந்தது. 13 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பெருக்கம்
கொரோனாவின் இரண்டாவது அலை அதற்கான வாய்ப்பு இருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் எச்சரிக்கை விடுக்கின்றார். கொரோனா நோய் தொற்று குறைந்து வந்தாலும் மக்கள் முக்கிய விதிமுறைகள் பின்ப்பற்றவில்லை என்றால் நிச்சயமாக நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
வீடுகளில் தனிமைப்படுத்துதல்
பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலர் தனிமைப்படுத்தப் பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
முதல்வர் எச்சரிக்கை
கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. வீட்டில் இல்லாமல் வெளியே நடமாடினால் மேலும் இது பெரும் பாதிப்பை உண்டு செய்யும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுக்கின்றார். மும்பை போன்ற நகரங்களில் மழை பெய்து வருகின்றது. மழை அதிகமாகப் பெய்து வருவதால் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நிற்கின்றனர். இந்த நிலையில் அரசு பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றது. ஆகையால் இதனை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகின்றது.
மக்கள்தொகை
மகாராஷ்டிரா போன்ற மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இவர்கள் பொது சுகாதாரத்தை கண்டிப்புடன் பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.