தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கின்றது எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் இந்த நோய் பரவல் குறைந்தபாடில்லை. வீட்டில் இருந்து வேலை செய்யும் பலர் இருக்கின்றனர். இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை, தேர்வுகள் அனைத்தும் ரத்தாகி இருக்கின்றன. சுற்றுப்புறங்கள் அனைத்தும் மருந்து தெளித்து பாதுகாக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த கொரோனாவின் தொற்று குறைந்தபாடில்லை என்பதை அரசு கவனித்து வருகின்றது.
ஜூலை 25 நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சகம் தனது முயற்சிகள் அனைத்தும் வீணாவதை எண்ணி அதிர்ச்சியில் உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று நாட்களாக ஒருநாள் தோற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் உடலில் ஆரோக்கியம் என்பது அவசியம் என்பதனை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
மக்களும் இதனைக் கவனித்து செயல்படுத்தி வருகின்றனர் இதனை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மிளகு ரசம் இந்திய மசாலாக்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கக் கூடியவை ஆகும். தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பத்தால் மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்த மாதம் பள்ளி, கல்லுரிகள் போன்றவை திறக்க அறிவிப்புகள் வெளியிட இருந்த நிலையில் கொரோனா குறையாமல் இருப்பது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க ஆயுத்தமாகியுள்ளது.