செய்திகள்தமிழகம்தேசியம்

வெள்ளமென ஊடுருவும் கொரானா மளமளவென சாயும் மக்கள்!

கொடூரம் அளிக்கும் கொரானா அப்டேட்டுகள் நம்மை கொஞ்சம் திணரடிக்கின்றது. இந்தியாவில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இன்றைய பொழுது இன்றும் முடியவில்லை. ஆனால் ஆறாயிரம் கொரானா பாதிப்பு கேஸ்கள் தாண்டி விட்டன. ஒரே நாளில் 9 ஆயிரம் கோவித்-19 பாதிப்புக்கள் உறுதியாகியுள்ளது.

கொரானா தேசத்தை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது எனலாம். இந்தியாவில் கோவித்-19 பாதிப்பு மொத்தம் இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கொரனா பாதிப்பானது குறையாமல் அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கோரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 74 ஆயிரத்து 870 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் 26 ஆயிரத்து 272 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுபோல் நாடு முழுவதும் கொரானாவின் கொடூரத் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ரயில் டிக்கெட்டுகள் ரத்தான முன்பதிவுகள் அனைத்தும் மீண்டும் தொடங்குகிறது. நாளை முதல் பயணம் என்பது உறுதியாகியுள்ளது.

கோவித்-19 காரணமாக மார்ச் மாதம் முதல் போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஏற்கனவே இரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் நாளை முதல் பெறலாம். சென்னை கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கோவித்-19 அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு ரயில்கள் தவிர மற்ற ரயில்கள் அனைத்தும் ஜூன் 30 வரை ரத்தாகி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கள் ஏற்கனவே தொடங்கப்பட்ட இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலை கழக ஆய்வுகள்:

சென்னையில் ஜூலை 15க்குள் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொர்னா தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள், என்று எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவித்-19 பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஒரு சில மாவட்டங்களை தவிர அனைத்து பகுதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பேருந்து இயக்கங்கள் தமிழ்நாட்டில் எட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இனிவரும் நாட்களில் அது இன்னும் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி என்பது குறைவதால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகின்றது.

உடலில் மக்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். கொரானா தொடங்கிய நேரத்தில் இருந்த பய உணர்வு நாளடைவில் மக்களுக்கு இல்லாமல் போனதோ என்று என்னத் தோன்றுகின்றது. சமூக இடைவெளி சீராக இருக்க வேண்டும். மாஸ்க் அணிந்து வெளியே செல்வது அவசியமாகும். பயணங்களில் யாரையும் தொடுவது, அருகில் சென்று பேசுவதை மக்கள் குறைக்க வேண்டும். ஆரோக்கியமான பொருட்களை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *